முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சருக்குக் கடிதம்!
சென்னை,
ஜூன் 12 உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி மாதந்தோறும் உரிய அளவில் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவதை உறுதி செய்யுமாறு ஒன்றிய அரசுக்கு நேற்று (11.6.2021) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடிதம் எழுதியுள்ளார்.
இது
குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்
அவர்கள், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்துக்கு எழுதி உள்ள கடிதத்தில், காவிரி டெல்டா பகுதி தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்றும், மேட்டூர் அணை டெல்டா பகுதிகளின் உயிர்நாடி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றை
நம்பியே தமிழ்நாட்டின் விவசாய உற்பத்தி உள்ளதாக தெரிவித் துள்ள அவர், இவ்வாண்டும், டெல்டா பகுதி விவசாயிகள் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது
அணையில் உள்ள நீர் இருப்பு மற்றும் தென்மேற்கு பருவமழை குறித்த இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின் கணிப்புக்களின் அடிப்படையில், ஜூன் 12 ஆம் தேதி (இன்று) மேட்டூர் அணையை டெல்டா பாசனத்திற்கு திறந்துவிட உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவர்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேட்டூர்
அணையின் தண்ணீரை நம்பியிருக்கும் நிலை
உச்சநீதிமன்ற
உத்தரவுப்படி காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படும் என்ற நம்பிக் கையின் காரணமாகவே மேட்டூர் அணையை திறப்பதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்
அவர்கள், தென்மேற்கு பருவமழை டெல்டா பகுதி களுக்கு பெரிய அளவில் பயனளிக்காது என்பதால் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையின் தண்ணீரை நம்பியிருக்கும் நிலையே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்டபடி
தண்ணீர் திறப்பதில் தடை ஏற்பட்டால், தற்போதுள்ள பயிர்கள் மற்றும் அடுத்த மாதம் தொடங்க உள்ள சம்பா சாகுபடிக்கான பணிகளும் பாதிக்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மாதந்தோறும் உரிய அளவில் தண்ணீர் விடுவதை உறுதி செய்க!
எனவே
கருநாடக அணைகளில் இருந்து இருமாநிலங்களின் எல்லையான பிலிகுண்டுலுக்கு மாதந்தோறும் வரும் தண்ணீரின் அளவு உச்சநீதிமன்ற உத்தரவின்படி, குறுவை சாகுபடிக்கு ஏற்றவாறு, ஜூன் மாதத்தில் 9 புள்ளி 19 டி.எம்.சி.யாகவும், ஜூலை மாதத்தில் 31 புள்ளி 24 டி.எம்.சி.-யாக இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
எனவே,
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரிமேலாண்மை வாரியம் மாதந் தோறும் உரிய அளவில் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் உறுதி செய்யவேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவர் கள் தமது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment