செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 2, 2021

செய்தியும், சிந்தனையும்....!

 மினிமம் கவர்னன்ஸ்!?

*        18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிப் பணி அறிவித்தபடி மே ஒன்றாம் தேதி தொடங்கப்படவில்லை.

>>           அரசின் செயல் திட்டம் எந்த அளவு வக்க ணையாக இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு.

திருநெல்வேலி அல்வாவா?

*           பெண் காவலரிடம் நகைப் பறிப்பு.

>>           பலே, பலே' சட்டம் ஒழுங்கு!

என்ன மனமோ!

*        ரெம்டெசிவர் மருந்து கள்ளச் சந்தையில் விற்பனை - 4 பேர் கைது.

>>           வீடு பற்றி எரியும்போது சுருட்டுக்கு நெருப்பு' என்ற கதைதான்.

எல்லாம் அவாளே!

*           காஞ்சி சங்கர மடத்திற்கும், காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கும் ஸ்ரீ காரியம் பொறுப்பை முறையே சல்லா விசுவநாத சாஸ்திரி, சுந்தரேச அய்யர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

>>           இந்து மதமும், சங்கர மடங்களும் யாருக்கானது என்பது புரிகிறதா?

குடி செய்வார்க்கில்லை பருவம்!'

*           ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை.

>>           கேட்டால், பார்த்தீர்களா - மக்களிடத்தில் பணப் புழக்கம் - பொருளாதார வளர்ச்சி என்று கூறுவார்களோ!

அதுதலையெழுத்து!'

*           .பி.யில் ஏப்ரல் 15 முதல் 29 வரை - கரோனா உச்சகட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் - தேர்தல் பணியில் ஈடுபட்ட 700 ஆசிரியர்கள் மரணம்.

>>           ஹிந்து ராஜ்ஜியம் - ‘கடமையைச் செய் - பலனை எதிர்பார்க்காதே!'

வேறு வேலை இல்லையா?

*           தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் 63 லட்சத்து 63 ஆயிரம் பேர்.

>>           இல்லை, இல்லை என்பதுதான் ஆட்சியின் சாதனைகளோ! ‘சாலையோரத்தில் வேலை யற்றதுகள் - முகத்தில் கேள்விக்குறி!' (அறிஞர் அண்ணாவின் வசனம்).

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் போடலாமே!

*           சென்னை கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் கரோனா தடுப்பூசி!

>>           மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு மட்டும்தான் இருக்கிறார்களா?

கெட்டதிலும் ஒரு நல்லது!

*           கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டில் பாட்டில் குடிநீர் விற்பனை கடும் சரிவு.

>>           வீட்டில் காய்ச்சிக் குடிக்கும் நீர்தான் முதல் தரம்!

No comments:

Post a Comment