சர்வம் பார்ப்பனர் மயமே!

சிறு குறு தொழில் அனுமதி வழங்கும் வாரியம் சமீபத்தில் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. இந்த வாரியத்தில் நிர்வாகம் சாராத பரிந்துரைக்கான உறுப்பினர்கள் அனைவருமே பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினராக உள்ளனர் என்று ஆங்கில நாளேடுஇந்தியன் எக்ஸ்பிரஸ்செய்தி வெளியிட்டுள்ளது

அதன் தமிழாக்கம் வருமாறு:

புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள  சிறு குறு தொழில் முனைவோருக்கு அனுமதி அளிக்கும் . வாரிய உறுப்பினர்கள் 46 பேர் கொள்கை மறு ஆய்வில் முக்கியப் பங்கு வகிக்க உள்ளனர். அதில் 26 நபர்கள் அரசு அதிகாரிகள். மீதம் உள்ள 20 பேர் தொழிற்துறையின் குரல்களாக இருப்பார்கள். தொழிற்துறை சார்பில் வாரியத்திற்கு வரும் உறுப்பினர் தேர்வில் அரசியல் முக்கிய பங்காற்றியுள்ளது என்று தெரியவந்துள்ளது. அந்த 20 நபர்களில் பாஜக உறுப்பினர்கள், மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் இருக்கும் லகு உத்யோக் பாரதி உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். எம்.எஸ்.எம்.. மேம்பாட்டு சட்டம் பிரிவு மூன்றின் படி, மத்திய அரசால் அமைக்கப்படும் இந்த வாரியத்தில் 20 நபர்கள் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அதில் மூன்றுக்கும் குறையாமல் பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்களின் பிரதிநிதிகளும், மூன்றுக்கும் குறையாமல் நுண் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் மத்திய அரசால் நியமிக்கப்பட வேண்டும் என்பதாகும்.

இந்த பட்டியலை ஆய்வு செய்த போது ஒரு பாஜக சட்டமன்ற உறுப்பினர், மூன்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் / வேட்பாளர்கள், ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் .ஜே.எஸ்.யுவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், லகு உத்யோக் பாரதி உறுப்பினர்கள் 6 பேர், 6 பாஜக நிர்வாகிகள், எஃப்.அய்.சி.சி.சி. உறுப்பினர்கள் 2 பேர் மற்றும் குஜராத்தில் இருந்து ஒரு உறுப்பினர் இந்த பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் தொடர்பு உள்ளவர்கள் பின்வருமாறு: பீகாரைச் சேர்ந்த பாஜக எம்.எல்.. குந்தன் குமார், ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் பாஜக எம்.எல். பென்மேட்சா விஷ்ணு குமார் ராஜு, 2014 -அரியானாவைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் யஷ்வீர் தாகர், ப்ரவத் கேஷரி மிஸ்ரா - ஒடிசா, 2009இல் கட்டாக்கில் பாஜக வேட்பாளராக இருந்தார். இரண்டு நிறுவனங்களின் இயக்குநராக உள்ளார்.

டில்லியை சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர் டீனா ஷர்மா, ரஷ்மி மிஸ்ரா - பாஜகவின் புர்வான்சல் மோர்ச்சாவை சேந்தவர், பாஜக மணிப்பூர் பொருளாளர் ராபின் ப்ள்க்கேய், பஞ்சாப் பாஜக மாநில நிர்வாகி ராகேஷ் குப்தா, மகாராட்டிரா பாஜக உத்யோக் அகதி மாநில தலைவர் பிரதீப் பெஷ்கர், பாஜக யுவ மோர்ச்சாவின் துணைத் தலைவராகவும், குஜராத்தில் பாஜகவின் மாநில செயலாளராகவும் இருக்கும் பாஜக தலைவர் அமித் தாக்கரின் மனைவியான வதோதராவைச் சேர்ந்த பி-மெட் ஹைடெக் இயக்குநரான ஹேமல்பென் மேத்தா, பல்தேவ்பாய் கோவிந்த்பாய் பிரஜாபதி, லகு உத்யோக் பாரதி தலைவர், எல்.யூ.பி.யின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நரேஷ் சாந்த் பரீக், பி.ஜே.ஒய்.எம். முன்னாள் தேசிய நிர்வாகி மற்றும் எல்.யூ.பி.யின் செயலாளார் சம்பத் தோஷ்னிவால்.

நியமனம் செய்யப்பட்ட அந்த 20 நபர்களில் எஃப்.அய்.சி.சி.அய் அமைப்பின் மகளிரணியின் முன்னாள் தலைவர் ஹர்ஜிந்தர் கவுரும் இடம் பெற்றுள்ளார். அதே போன்று கருநாடக எஃப்.அய்.சி.சி.அய் அமைப்பின் முன்னாள் தலைவரும், ப்ரீமியர் ஸ்டார்ச் ப்ரோடக்ட்ஸ் நிறுவனத்தின் தலைவருமான ஜே.ஆர். பங்கேராவும் இடம் பிடித்துள்ளார். எம்.எஸ்.எம்.. அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்கு பதில்கள் ஏதும் கிடைக்கவில்லை. சில நபர்கள் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எம்.எஸ்.எம்.. மேம்பாட்டு சட்டத்தின் படி அதிகாரப்பூர்வ உறுப்பினர்கள் 26 பேர் உள்ளனர். அதன் தலைவராக நிதின் கட்கரி உள்ளார். இணை அமைச்சர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் 6 மாநில அரசின் அமைச்சர்கள், மூன்று மக்களவை உறுப்பினர்கள், யூனியன் பிரதேச நிர்வாகி, எம்.எஸ்.எம்.. செயலாளர், காமர்ஸ் மற்றும் இண்டெஸ்ட்ரி துறை, ஃபுட் ப்ரோசசிங் துறை, லேபர் மற்றும் திட்ட துறை செயலாளர்கள், தேசிய வங்கியின் தலைவர், சிறிய தொழிற்துறை வங்கியின் சேர்மென், அய்.பி.ஏவின் சேர்மன், ஒரு ஆர்.பி.அய். உறுப்பினர், மூன்று சிறப்பு அதிகாரிகள், மத்திய தொழிற்சங்கங்களில் இருந்து இரண்டு பிரதிநிதிகள் மற்றும் இணை செயலாளர் பொறுப்பிற்கு கீழே இல்லாத ஒரு அதிகாரி ஆகியோர் இதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இணை அமைச்சரும் - ஒடிசா பாதிரியார் குடும்பத்தோடு எரித்துக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர் என்று குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பஜ்ரங்க் தள் தலைவருமான ப்ரதாப் சந்திரா சாரங்கி துணைத் தலைவராக உள்ளார். உத்தரகாண்ட், இமாச்சல், சிக்கிம், மகாராட்டிரா, கருநாடகா மற்றும் அசாம் மாநில அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக உள்ளனர். அங்கர் லால்வானி (பாஜக), பீசெட்டி வெங்கட சத்யவதி (ஒய்,எஸ்.ஆர்.சி.பி), பந்தா பிரகாஷ் (டி.ஆர்.எஸ்) போன்ற எம்.பிக்களும் இதில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு அங்கீகாரம் பெற்ற உறுப்பினர்கள் பிரிவிலும் கூட அரசியல் முக்கிய பங்காற்றுகிறது. ப்ரவின் குமார் அகர்வால் சிலிகுரியின் மாவட்ட பாஜக தலைவர், ஸ்மிதா யஷ்வந்த் கைசஸ் (பொருளாதார நிபுணர்), லகு உத்யோக் பாரதியின் துணை தலைவர் உத்பால் பரிக்கர் அயுரான் இம்ப்லாண்ட்ஸின் எம்.டி மற்றும் மறைந்த பாஜக தலைவர் மனோகர் பாரிக்கரின் மகன் ஆவார். இவர்கள் தான் இம்முறை சிறப்பு அங்கீகாரத்தின் படி வாரியத்திற்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள்.

ரூ. 15,699.65 கோடி இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் எம்.எஸ்.எம்..க்கு அனுப்பப்பட்டது. அதில் ரூ. 10 ஆயிரம் கோடி தகுதிவாய்ந்த எம்.எஸ்.எம். கடன் வாங்குபவர்களுக்கு மத்திய அரசின் உத்தரவாத அவசர கடன் (Guarantee Emergency Credit Line (GECL))  வசதிக்கு ஒதுக்கப்பட்டது.இதன் படி இனிமேல் சிறுகுறு தொழில் தொடங்க யார் முன்வந்தாலும் அவர்கள் பாஜகவினராக இருக்கவேண்டும் அல்லது அவர்களுக்கு ஆதரவானவர்களாக இருக்கவேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது. பா... ஆட்சி என்றாலே பார்ப்பன மயம்தானே!

Comments