60 நோயாளிகள் உயிருக்கு ஆபத்து டில்லி கங்காராம் மருத்துவமனை

 புதுடில்லி, ஏப்.23 ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவது தொடர்பாகபிச்சை எடுங்கள், திருடுங்கள், ஆனால் மக்கள் உயிரைக் காத்திடுங்கள்என்று டில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தே டில்லியின் எதார்த்த சூழ்நிலையை வெளிக்காட்டி உள்ளதுஇந்த நிலையில், டில்லி கங்கா ராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லி கங்காராம் மருத்துவமனை நிர்வாகம் இது தொடர்பாக கூறியிருப்பதாவதுஆக்சிஜன் 2 மணி நேரத்துக்கு மட்டுமே இருப்பதால் 60 நோயாளிகள்  உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. வெண்டிலேட்டர்ஸ், முழுமையாக செயல்படவில்லை. அவசரமாக ஆக்சிஜன் தேவைப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Comments