உரத்தநாட்டில் தந்தை பெரியார் சிலைக்குக் காவித்துண்டா? தலைவர்கள் கண்டனம்

உரத்தநாடு, மார்ச் 2- உரத்தநாட்டில் 28.2.2021 இரவு நேரத்தில் தந்தை பெரியார் சிலைக்கு காவி ஆடை அணிவித்தும், தொப்பி அணிவித் தும் அவமரியாதை செய்யப்பட்டதற்கு தலை வர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள னர். அதன் விவரம் வருமாறு:

வைகோ

28.02.2021 அன்று தஞ்சை மாவட்டம், உரத்தநாட்டில் உள்ள தந்தை பெரியார் அவர்க ளின் உருவச் சிலைக்கு காவித் துண்டு அணி வித்தும், தலைக்கு தொப்பி அணிவித்தும் சில அநாமதேயங்கள் நள்ளிரவில் இழி செயலில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகிய தலைவர்களின் உருவச் சிலைகள் மட்டுமல்ல, வான்புகழ் வள்ளுவம் தந்த திருவள்ளுவர் சிலைகளும்கூட இந்த ஆட்சியில் அவமரியாதை செய்யப்படுவது என்பது வாடிக்கையாகிவிட் டது. தேர்தல் நெருங்கும் இந்த நேரத்திலும்கூட இத்தகைய கேவலமான செயல்கள் அரங்கேறு கிறது என்றால், தமிழக காவல்துறை பொறுப் பின்றி மெத்தனமாக கிடக்கிறது என்பதைத் தான் இது சுட்டிக்காட்டுகிறது.

காவல்துறை அதிகாரிகள் தமிழர் தலைவர் களின் சிலைகள் கேவலப்படுத்தப்படும்போ தெல்லாம் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, அந்த அக்கிரமச் செயலை நீர்த்துப் போகச் செய்வது என்பதும் வாடிக்கையாகி விட்டது.

மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக நம் சமுதாயம் அமைவதற்கு வாழ்நாள் முழுக்க கண் துஞ்சாமல் போராடியவர் தந்தை பெரியார். எதிர்ப்புகள் சூழ்ந்தபோதெல்லாம் அதனை முறியடித்து, ஒடுக்கப்பட்ட தமிழ் மக் களை ஆதிக்க சக்திகளிடமிருந்து தாய்ப் பறவை யாக பாதுகாத்திட்டவர் தந்தை பெரியார்.

அவர் மறைந்து அரை நூற்றாண்டு காலம் நெருங்குகிற இந்த வேளையிலும் அவருடைய உருவச் சிலை குறி வைத்து தாக்கப்படுவதும், தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தண்டிக்கப் படாததும் இந்த ஆட்சியில் தொடர் கதையாக தொடர்ந்து வருகிறது. இந்த அக்கிரமச் செயலை மறு மலர்ச்சி தி.மு.. சார்பில் கடுமையாக கண்டிக்கி றேன்.

இந்தப் பிரச்சினையிலாவது குற்றவாளி களைக் கைது செய்து, கூண்டில் ஏற்றி, தண்டிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் வற்புறுத் துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

கே.எஸ்.அழகிரி

தஞ்சை மாவட்டம், உரத்தநாட்டில் அமைந் துள்ள, தந்தை பெரியார் சிலைக்கு மதவெறி சக்திகள் காவித் துண்டு போர்த்தி இழிவுபடுத் தியதை வன்மையாக கண்டிக்கிறேன். தன் வாழ்நாள் முழுவதும் எந்த வகுப்புவாதக் கொள்கைகளை எதிர்த்துப் போராடினாரோ, அதே சக்திகள் இன்றைக்கு காவித் துண்டைப் போர்த்தி களங்கப்படுத்தியிருக்கிறார்கள்.

தந்தை பெரியார் எந்த கொள்கைகளுக்காக வாழ்ந்தாரோ, அந்த கொள்கைகள் பீடுநடை போடும் பூமியாக தமிழகம் இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத பாசிச, பிற்போக்கு எண்ணம் கொண்ட வகுப்புவாத சக்திகள் இத்தகைய செயலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுபோன்ற செயல்கள் தொடருமேயானால் அதற்குரிய விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

இரா.முத்தரசன்

தஞ்சை மாவட்டம் உரத்த நாட்டில் உள்ள தந்தை பெரியார் சிலை மீது, காவி ஆடை அணிவித்ததை மிக வன்மையாக கண்டிக்கி றோம்.

பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசுவது, காவி ஆடைஅணிவிப்பது போன்ற ஈனத்தன மான செய்கைகள் மூலம் தமிழ்நாட்டை காவிக் கூடமாக மாற்ற முடியாது.

பெரியார் வழி, அண்ணா வழி, அம்மா வழி வந்ததாக கூறிக் கொள்பவர்கள் ஆட்சியில் தொடர்ந்து இத்தகைய இழிவான சம்பவங்கள் நடப்பது அவமானகரமாகும்.

இத்தகைய சமூக விரோத கும்பலைக் கண்டு அரசு அஞ்சி - நடுங்குவது வியப்பளிக்கின்றது.

தாங்கள் உயர்ந்த பதவியில் அமர்ந்திருக்க காரணமாக விளங்கும் தந்தை பெரியாரை அவமானப்படுத்தும் செயல் கண்டு அரசு தொடர்ந்து மவுனம் சாதித்தால், சமூக விரோதிகளுக்கு எதிராக பொது மக்களே சட்டத்தை கையில் எடுக்கும் நிலை ஏற்படும் என்பதனை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

எம்.எச்.ஜவாஹிருல்லா

சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை ஒழித்துக்கட்டி, சமூகநீதியும் சம தகுதிக்கான வாழ்க்கைக் கும் வழிகாட்டிய தந்தை பெரியாரின் சிலை தஞ்சாவூர் மாவட்டம் உரத்த நாட்டில் காவித் துண்டு அணிவித்தும், அவர் தலை யில் தொப்பி அணிவித்தும் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ள செயல் தமி ழகக் காவல்துறையின் இயலாமையைக் காட் டுகிறது என்பதும், இந்த இழிசெயல் காவிகளின் கைங்கர்யம் என்றே தெரிகிறது.

தந்தை பெரியார் இந்த மண்ணை விட்டு மறைந்து அய்ம்பது ஆண்டுகள் நெருங்கும் நிலையில், இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பெரியாரின் சமூக நீதி கோட்பாடுகள் தமிழ் மண்ணிலும், தமிழ் சமுதாயத்திலும் அடித்து நொறுக்கப்பட்டு வருவதும், பெரியாரின் ஜீவநாத கொள்கையான சமூகநீதி இம்மண்ணில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமு மாக காப்பாற்றப்பட்டு வருவதும் இந்த தமிழ் மண்ணை அபகரித்து, ஆளத் துடிக்கும் சங்பரி வார் சனாதன கும்பலுக்கு பெரும் அச்சுறுத்த லாக இருப்பதாலேயே இதுபோன்ற கேடு கெட்ட செயல்களை தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார்கள் என்பதை மனிதநேய மக்கள் கட்சி அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

பெரியார் மட்டுமின்றி, சங்பரிவாரின்  பல்வேறு அருவருக்கத்தக்க கோட்பாடுகளை தனது திருக்குறள் மூலம் அம்பலப்படுத்திய திருவள்ளுவர், அறிஞர் அண்ணா உள்ளிட்ட பல தமிழ் அறிஞர்களின் சிலைகளும் கடந்த காலங்களில் காவி பயங்கரவாதிகளால் சேதப் படுத்தப்பட்டும், களங்கப்படுத்தப்பட்டும் உள் ளன.

அப்போதெல்லாம் யாராவது ஒரு மனநலம் பாதித்த அப்பாவியைக் குற்றவாளியாக மக்கள் முன் காட்டி, அத்தகைய அநாகரீக செயலை மூடிமறைக்கும் செயலை செய்துவரும் தமிழகக் காவல்துறை, உரத்தநாட்டில் பெரியார் சிலையை காவி மூலம் அசிங்கப்படுத்திய கயவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி, திராவிட இயக்கத் தலைவர்கள், தொண் டர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழினமும் வெகுண்டெழுந்து போராடுவதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

காயல் அப்பாஸ்

தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு பாரதிதாசன் மகளிர் கல்லூரி எதிரே பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள பெரியார் உருவ சிலைக்கு காவித் துண்டு அணி வித்தும், அவர் தலையில் தொப்பி அணி வித்த சமூக விரோதிகளின் செயலை  ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மிகவும் வன்மை யாக கண்டிக்கிறது .

தந்தை பெரியார் இந்த மண்ணை விட்டு மறைந்து அய்ம்பது ஆண்டுகள் ஆனாலும் பெரியாரின் கொள்கை இன்றைக்கும் ஏற்றுக் கொண்ட லட்சக்கணக்கான தொண்டர்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். தமிழக மக்களால் போற்றப்படும் உன்னதமான தலைவர் பெரியாரின் உருவச் சிலை அவம திப்பை ஒரு போதும்  ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும் அறிஞர் அண்ணா, திருவள்ளுவர், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் உருவச் சிலைகளை தமிழகத்தில் தொடர்ந்து அவம தித்து வரும் சமூக விரோதிகளை காவல்துறையினர் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சிக் கழகம் வலியுறுத்துகிறது .

உரத்தநாட்டில் பெரியாரின் உருவச்சிலைக்கு காவிமூலம் அசிங்கப்படுத்திய குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து கடுமையான சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என தமிழக அரசையும், காவல்துறையையும் ஜன நாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

இவ்வாறு அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Comments