திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் - 68ஆம் ஆண்டு பிறந்த நாள்

தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை

தமிழர் தலைவர் தளபதிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்

சென்னை, மார்ச் 1- திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்களின் 68ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (1.3.2021) காலை 7.20 மணியளவில் அவர் தந்தை பெரியார் நினைவிடத்திற்கு வருகை தந்தார். தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அன்னை மணியம்மையார், சுயமரியாதை சுடரொளிகள் தூண் ஆகிய இடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் தந்தை பெரியார் நினைவிட நுழைவாயில் அருகே இருக்கும் நினைவில் வாழும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் நட்டு வைக்கப்பட்ட மரக்கன்று அருகே தளபதி மு..ஸ்டாலின் அவர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து அறிக்கை கொடுத்து இனிப்பு வழங்கி, கழக வெளியீடுகளை வழங்கி வாழ்த்தினார். பின்னர் சில மணித்துளிகள் தமிழர் தலைவருடன் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் உரையாடி விடைபெற்று சென்றார். முன்னதாக அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் நினைவிடங்களில் மு..ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

கழகத் தலைவருடன் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் .பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இந்நிகழ்வில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர் .இராசா, மேனாள் அமைச்சர்கள் ..வேலு, கே.என்.நேரு, டாக்டர் பூங்கோதை, அய்.பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், இரவிச்சந்திரன், தாயகம் கவி, எழும்பூர் பகுதி திமுக நிர்வாகிகள், ஏகப்பன், கிருஷ்ணமூர்த்தி, தேவநிதி மற்றும் வழக்குரைஞர் சென்னியப்பன், ஓசூர் வனவேந்தன், திமுக சுற்றுசூழல் அணியின் துணைச் செயலாளர் செல்வக்குமார் மற்றும் திமுக தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.

Comments