செய்தியும், சிந்தனையும்....!

இறுதிப் பயணத்துக்கு

ஒரு சாலை

தமிழ்நாட்டில் எட்டுவழிச் சாலை திட்டத்துக்கு விரைவில் டெண்டர்.

.தி.மு.. ஆட்சியின் இறுதிப் பயணத்துக்கான சாலைக்கு டெண்டர் விடப்பட உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாமா?

யார் சாதனை?

5 ஏக்கரில் 11 டி.எம்.சி.க்குமேல் நீர் இருப்பு - சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை.

இது அரசு சாதனையா? மழையின் சாதனையா?

காமெடி பீஸ்!'

மக்கள் சபைக் கூட்டத்தின்மூலம் ஸ்டாலின் காமெடி செய்கிறார்: - தமிழக தொல்லியல் துறை அமைச்சர்

அரசு ரீதியாக கிராம சபைக் கூட்டத்தைக் கூட்ட வக்கில்லாதவர்களின்காமெடி பீஸ்' இது!

உயர உயரப் பறக்கும்!

பெட்ரோல், டீசல் மீது கூடுதல் வரி.

ஜெட் வேகத்தில் விலைவாசி உயர்வு என்னும் விமானம் உயர உயரப் பறக்கப் போகிறது.

அலட்சியம், அலட்சியம்!

மதுரையில் பராமரிப்புப் பணியின்போது - 80 ஆண்டு பழைமையான வீடு இடிந்து ஒருவர் மரணம்.

தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த இந்தக் காலத்தில் இந்த நிலையா? அலட்சியம், அலட்சியம்!

இனமணி'க்குவிருதா?

தினமணி'க்கு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நாளிதழ் விருது: - முதலமைச்சர் வழங்கினார்

மனுதர்மத்தைத் தடை செய்ய நேர்ந்தால், திருக்குறளையும் தடை செய்யவேண்டும் என்று எழுதுகிற ஒரு  தி()னமணி'க்கு

அரசு விருது!

வாழ்க அண்ணா ‘‘நாமம்!''

துண்டும் ஏந்துவார் சங்கராச்சாரியார்!

அயோத்தியில் ராமன் கோவில் கட்ட காஞ்சி சங்கர மடம் திரட்டிய நிதி அறக்கட்டளை நிர்வாகியிடம் ஒப்படைப்பு.

எவ்வளவு நிதி என்று அறிவிக்கப்படாதது என்னமர்மமோ!' ‘ராமன்' என்றால் காஞ்சி மடம் வசூலில் இறங்குவதைக் கவனிக்கவேண்டும். யார் கண்டது சங்கராச்சாரியார் துண்டு ஏந்தியும், உண்டியல் குலுக்கியும் கூடராமன்' விடயத்தில் நடந்துகொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இரு மடங்குஎன்னாயிற்று?

விவசாயிகளுக்கு உற்பத்தி செலவைவிட ஒன்றரை மடங்கு அதிக விலை தருவது பட்ஜெட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இரு மடங்கு என்று சொன்னது என்னாயிற்றாம்?

Comments