வங்கி துணை மேலாளர் பணி நிறைவு - பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 28, 2021

வங்கி துணை மேலாளர் பணி நிறைவு - பாராட்டு

பெரியார் திடலில் இயங்கிவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வேப்பேரி கிளை அலுவலகத்தில் துணை மேலாளராக பணியாற்றி பணியிலிருந்து ஓய்வு பெறும் சந்திரசேகர் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு 26.2.2021 அன்று மாலை நடைபெற்றது. பணியிலிருந்து ஓய்வுபெற்ற துணை மேலாளர் சந்திரசேகருக்கும், அவர் இணையருக்கும் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் வங்கிக் கிளை மேலாளர் சுபாஷினி முன்னிலையில் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். வங்கிப் பணியாளர்கள், பெரியார் திடல் பணித் தோழர்கள் பாராட்டையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்கள்.

No comments:

Post a Comment