பக்தியின்பெயரால் பார்ப்பனர்களின் சுரண்டலும், பொருள் விரயமும்

மயிலாடுதுறை, பிப். 28- மயிலா டுதுறை காவிரிக்கரையில் மாசி மகத்தை முன்னிட்டு பக்தர்கள்  காய்கறிகள், பழங் கள் இவற்றோடு பணத்தையும் பார்ப்பனர்களிடம் கொடுத்து பூஜை செய்தனர். பார்ப்பனர்கள் பூஜை முடிந் ததும் தங்களுக்குத் தேவை யான பொருள்கள், பணத்தை எடுத்துக்கொண்டு மற்ற பொருள்களை கொஞ்சமும் பொறுப்பில்லாமல் வீதியில் வீசி சுற்றுச் சூழலையும் கெடுத்துள்ளனர். ஒரு

கட்டு கீரை ரூ 15, இரண்டு வாழைக்காய் ரூ10, பரங்கி, பூசணி கீற்று தலா ரூ 10 விற்ற நிலையில், இப்படி தெருவில் வீசி எறிந்தது பார்ப்பவர்களை வேதனையில் ஆழ்த்தியது.

கடவுளுக்கு அளிக்கப் படும் காணிக்கை என்னவா கிறது என்பதை பக்தர்கள் எப்போது புரிந்துகொள்வார் கள்?

இப்படித்தான் பாமர மக் களிடமிருந்து பக்தி, மூடச் சடங்குகளின் பெயரால் பார்ப்பனர்களின் சுரண்ட லும், பொருள்களின் விரய மும் தொடர்ந்துகொண்டு உள்ளன. உரியவர்கள் சிந்திப் பார்களா?

Comments