சென்னை-சேலம் எட்டுவழிசாலைத்திட்டத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் என்பதா?

மத்திய அரசுக்கு எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம்  கண்டனம்

 ஒசூர், பிப்.2- மத்திய மோடி அரசை எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த 20-21_-2022 க்கான நிதி அறிக்கையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் சென்னை சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் விடப்படும் என  அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே உச்சநீதிமன்றமானது சுற்றுப் புற சூழல் அனுமதி இல்லாமல் எந்த வேலையும் செய்யக்கூடாது என்று அறிவித்துள்ள வேளையில், எட்டு வழி சாலையை போடு வோமென்று பட்ஜெட்டில் அறிவித்தது  இவர்கள் சட்டத்தை மதிக்கவில்லை என் பதையும் அதேபோல் தொடர்ந்து கடந்த இரண்டரை ஆண்டு களாக மக்கள் போராடி வரும் நிலையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக் கல்லை என்பதையுமே காட்டு கிறது.

மக்கள் விரோதமாக, விவசாயிகள் விரோதமாக செயல்பட்டுக் கொண் டிருக்கும் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இவர்கள் எத்தனை பட் ஜெட் போட்டாலும் எந்த பணம் ஒதுக்கினாலும் எங்கள் நிலங்களை ஒரு சென்ட் கூட எட்டு வழிசாலைக்கு கொடுக்க  மாட்டோம் என்பதை இந்த வேளை யில் தெரிவித்துக்கொள்கிறோம். 

அதேபோல் தமிழகத்தில் உள்ள எடப்பாடி அரசாங்கம் தொடர்ந்து மத்திய அரசுக்கு கைக்கூலியாக இருந்து  மக்கள் விரோத செயலை செய்து கொண்டிருக்கிறது, இத் தகைய அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளை  வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தோற் கடித்து இவர்களை மீண்டும் தமிழகத்தில் எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அனுமதியாத அள வுக்கு செய்வோம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments