தேசிய சராசரியை விடக் குறைவான பெண்களின் கல்வியறிவு விகிதம்

பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

புதுடில்லி,பிப்.2- தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் பிற பிற்படுத்தப் பட்ட வகுப்புகளில் உள்ள பெண் களின் கல்வியறிவு விகிதம் தேசியச் சராசரியை விடக் குறைந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட 2020-_21ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

''இணைய வசதி, கணினி, மடிக்கணினி, ஸ்மார்ட்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் உபகர ணங்களை அணுகுவதில் தற் போது முக்கியத்துவம் அதிகரித் துள்ளது. தொலைதூரக் கற்றல் மற்றும் வீட்டில் இருந்து வேலை ஆகியவற்றால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. கிராமப்புற இந் தியாவில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாண வர்கள் சொந்தமாக ஸ்மார்ட் போன்களை வைத்திருக்கும் சதவீதம் 2018இல் 36.5 விழுக் காடாக இருந்தது. இது 2020ஆம் ஆண்டில் 61.8 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதை முறை யாகப் பயன்படுத்தினால் கிராமப் புற மற்றும் நகர்ப்புறங்களில் பாலினம், வயது மற்றும் வரு மானக் குழுக்களுக்கு இடையில் உள்ள டிஜிட்டல் பிளவும் சமத் துவமின்மையும் கணிசமாகக் குறையும். நாட்டில் கல்வியறி வைப் பொறுத்தவரையில், தொடக்கப் பள்ளி அளவில் 96 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாக உள் ளனர். 100 சதவீதக் கல்வியறிவை அடைய, நாடு 4 சதவீதம் பின் தங்கியுள்ளது. தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் பிற பிற்படுத்தப் பட்ட வகுப்புகளில் உள்ள பெண் களின் கல்வியறிவு விகிதம் தேசியச் சரா சரியை விடக் குறைவாக உள்ளது' 'இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments