உருமாறிய கரோனா பாதிப்பு பிரிட்டனிலிருந்து 82 நாடுகளில் பரவியுள்ளது

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

நியூயார்க்,பிப்.2 -இங்கிலாந்தில் கண்டறியப் பட்ட உருமாறிய கரோனா பாதிப்பு 82 நாடு களிலும், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப் பட்ட புதிய வகை கரோனா பாதிப்பு 39 நாடுகளிலும், பிரேசில் நாட்டில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் 9 நாடுகளிலும் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத் துள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பரில் இங்கி லாந்தில் புதிய வகை உருமாறிய கரோனா வைரசானது கண்டறியப்பட்டது.  இதனால், இந்தியா உள்பட பன்னாட்டளவில் பல்வேறு நாடுகளும் அந்நாட்டுடனான தங்களது விமானப் போக்குவரத்து சேவைக்கு தற்காலிக தடை விதித்தன.

இந்த புதிய வகை உருமாறிய கரோனாவானது எளிதில் பரவும் தன்மை கொண்டது என கண்டறியப்பட்டது.  இதனால், இங்கிலாந்தில் சமூக இடைவெளி பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகள் மீண்டும் கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரநிலை திட்டத்திற்கான தொழில் நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் ஆலோ சனை கூட்டமொன்றில் கலந்து கொண்டார். 

அவர் பேசும்பொழுது, இங்கிலாந்து நாட்டில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட உருமாறிய வகையை சேர்ந்த கரோனா பாதிப்பு 82 நாடுகளில் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. தென்ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப் பட்ட மற்றொரு வகை கரோனா பாதிப்பு 39 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளன.  இதே போன்று பிரேசில் நாட்டில் இருந்து கண்டறியப் பட்ட கரோனா பாதிப்பு 9 நாடுகளில் பரவி யுள்ளன என கூறியுள்ளார்.

Comments