ந.அ. இளமதி - இரா. வீரமணி இணையருக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வாழ்த்து

திராவிடர் கழக கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் - _நர்மதா ஆகியோரின் மகள் ந.அ. இளமதி, அத்திவெட்டி தி.மு.க கிளை செயலாளர் இராமமூர்த்தி -_ இராணி ஆகியோரது மகன் இரா.வீரமணி மண விழா 24-.01.-2021 அன்று பட்டுக்கோட்டையில் நடை பெற்றது.

தமிழர் தலைவர் காணொலியில் வாழ்த்துரை யாற்றினார்கள். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மணவிழாவினை நடத்தி வைத்தார்.

பொதுச் செயலாளர் வாழ்த்து

27.-01.-2021 அன்று மாலை   மதுக்கூர் அத்திவெட்டியிலுள்ள ஒன்றியம் மணமகன் இல்லத்திற்கு வருகை தந்த கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்.   மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். 

தந்தைபெரியார் சிலைக்கு மாலை

கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பெரியார் படிப்பகம் அருகில் உள்ள தந்தைபெரியார் சிலைக்கு  மாலை அணிவித்தார்.

கழகப் பொதுச் செயலாளருக்கு வரவேற்பு

அத்திவெட்டிக்கு முதல்முறையாக வருகை தந்த கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜை மாவட்ட திராவிடர் கழக தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன்  தலைமையில் திராவிடர் கழக தோழர் களும்  மதுக்கூர் ஒன்றிய தி.மு. செயலாளர் இளங்கோவன் தலைமையில் தி.மு. தோழர்கள் கிராம பெரு மக்களும் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

மருத்துவமனை வளாகத் திடலில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்   மரக்கன்றுகளை நட்டார்.

தொடர்ந்து கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயகுமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மாவட்டத் தலை வர்கள் பெ.வீரையன், சி.அமர்சிங் மாவட்டச் செயலாளர்கள் வை.சிதம்பரம், .அருணகிரி, மாநில பக துணைத்தலைவர் கோபு பழனிவேல், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், மதுக்கூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், மாவட்ட மகளிரணி தலைவர் வீ.மாலதி, ஒன்றிய பக தலைவர் புலவஞ்சி காமராஜ்.அத்தி ஆடலரசு, அத்தி வீரமணி, மாவட்ட . அமைப்பாளர் பொ.ராஜு, உரத்தநாடு பெரியார்நகர் .உத்திராபதி, மாவட்ட மாணவர் கழக தலைவர் இரா. கபிலன், மதுக்கூர் சரவணன். இளங்கோ, அத்தி வெட்டி ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் நெப் போலியன் உள்ளிட்ட அனை வரும் மரக்கன்றுகளை நட்டனர்.

Comments