சிவகங்கை - டிச. 2: சுயமரியாதை நாள்; ஆசிரியர் பிறந்த நாள் விழா - புத்தகங்கள் வெளியீடு

சிவகங்கை, பிப். 2- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 88ஆவது பிறந்த நாள் விழாவை முன் னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறிவுக்கொடையாக ஒப்பற்ற தலைமை, வாழ்வியல் சிந்தனைகள் மற்றும் ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம் எனும் தொகுப்புகள் அடங்கிய நூல்கள் வெளியீட்டு விழா சிவகங்கை மாவட்ட கழகத்தின் சார்பில் 2.12.2020 அன்று மாலை 5 மணி அளவில் சிவகங்கையில் திருப் பத்தூர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் மாளிகை மணிமுத்து மண் டபத்தில் மிகுந்த எழுச்சியுடன் நடை பெற்றது.

நூல் வெளியீட்டு விழா சிவகங்கை மாவட்ட திராவிட கழகத்தின் தலை வர் .சுப்பையா தலைமையிலும், விடு தலை வாசகர் வட்டத்தின் தலைவர் செ.சேதுராமன், மண்டலச் செயலா ளர் .மகேந்திரராசன், பொதுக்குழு உறுப்பினர் மணிமேகலை, மாவட்ட அமைப்பாளர் .அனந்தவேல், மாவட்ட துணைத் தலைவர் ஜெ.தனபாலன் மற்றும் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பெரிய கோட்டை மா.சந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

நிகழ்வில் பங்கேற்ற அனை வரை யும் வரவேற்று மாவட்ட கழகச் செய லாளர் பெரு.இராசாராமன் உரை யாற்றினார். தொடர்ந்து மாவட்ட துணைத் தலைவர் ஜெ.தனபாலன், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் செ.சேதுராமன், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் சார்பாக அரசு ஊழியர் அய்க்கியப் பேரவை மாவட்டச் செய லாளர் பெரியார் இராமு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் வீரபாண்டி, திமுக வழக்கறிஞர் அணிப் பொறுப் பாளர் ஆதி.அழகர்சாமி, திமுக மாவட்ட துணைச் செயலாளர் கே.எஸ்.எம்.மாரிமுத்து, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் தோழர் கண்ணகி ஆகியோர் தந்தை பெரியார் பற்றியும், பெரியா ருக்குப் பின்னர் இந்த இயக்கத்தை சிறப்பான முறையில் வழிநடத்துவ தோடு மட்டுமின்றி, மக்கள் நலன் சார்ந்த தமிழர் உரிமை சார்ந்த நிகழ் வுகளில் எவ்வாறெல்லாம் ஆசிரியர் அவர்கள், அனைத்து அரசியல் கட்சி களையும் ஒருங்கிணைத்து மிகச்சிறப் பான முறையில் பணியாற்றி வருகின் றார் என்பதை நினைவு கூர்ந்து அவருடைய பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசுவதற்கான வாய்ப்பினை பெற்றதற்காக பெரு மகிழ்ச்சி அடைகினறோம் என தங் களது கருத்துகளைப் பதிவு செய்து பேசினர்.

இறுதியாக முதன்மை விருந்தின ராகப் பங்கேற்றுப் பெருமை சேர்த்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் புலவர் சே.செவந்தியப் பன் நூல்களை வெளியிட அதன் முதற்படிகளை சிவகங்கை வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் திருமலை .முத்துராமலிங்கம் பெற்றுக் கொண்டார். நூலினை வெளியிட்டுச் சிறப்புரை வழங்கிய புலவர் செவந் தியப்பன், இந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் என்றும், இந்த வாய்ப்பை மிகப்பெரிய ஒன்றாகக் கருதுகின்றேன் என்றும், இப்பொ ழுது நடைபெற்றுக் கொண்டிருப்பது ஆரிய திராவிடப் போராட்டம், அதில் திராவிடராகிய நாம் வெற்றி பெறுவோம் என்றும் மிகுந்ததோர் எழுச்சி உரையை ஆற்றி விழாவிற்குப் பெருமை சேர்த்தார்.

விடுதலை வாசகர் வட்டத்தலைவர் செ.சேதுராமன், கழகத் தோழர்கள் மகேந்திரராசன், மணிமேகலை, அனந்தவேல், பெரியகோட்டை சந்தி ரன், தனபாலன், பெரு.இராசாராமன், இரா.புகழேந்தி, திமுக பொறுப்பாளர் கள் கே.எஸ்.எம்.மணிமுத்து, மாவட்ட மகளிரணி அணி அமைப்பாளர் பவானி கணேசன், மின் கழக தொ. மு.. மாவட்டச் செயலாளர் முரு கேசன், நகர இளைஞர் அணி அயூப்கான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் வீரபாண்டி, வழக்குரைஞர் மதி, திமுக வழக்கு ரைஞர் ஆதி.அழகர்சாமி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் கே.சண்முகராசன், மதிமுக பொறுப்பாளர்கள் .கார் கண்ணன், நாச்சியப்பன், சுந்தரபாண் டியன், ‘விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் பெரியர் இராமு மற்றும் பொறியாளர் இரா.கார்த்தி ஆகி யோர் நூல்களைப் பெற்று பெருமை சேர்த்தனர்.

சிவகங்கை நகர கழக இளைஞர் அணிப் பொறுப்பாளர் சிவக்குமார், திராவிட மாணவர் கழகத் தலைவர் முத்துலெட்சுமி, சுகந்தி கணேசன், இராஜ்குமார் பூமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்வில் பங்கேற்ற பல்வேறு அர சியல் கட்சிகளைச் சார்ந்த பொறுப் பாளர்களுக்கு விடுதலை வாசகர் வட்டம் சார்பாக அதன் தலைவர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார். நிறைவாக நகர திராவிடர் கழகத் தலைவர் இரா.புகழேந்தி நன்றி உரை யுடன் விழா முடிவுற்றது. மாவட்டத் திற்கு ஒதுக்கப்பட்ட 30 தொகுப்புக ளும் அரங்கிலேயே விற்றுத்தீர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Comments