கன்னிமாடம் திரைப்படத் தொடக்கத்திலும் பெரியார் - முடிவிலும் பெரியார் பொன்மொழிதான்!

நான் இயக்கும் எல்லா திரைப்படங்களையும் பெரியார் தொடங்கி வைப்பார் - பெரியாரே முடித்து வைப்பார்திராவிடர் திருநாளில்பெரியார்' விருது பெற்ற நடிகர் -இயக்குநர் போஸ் வெங்கட் உறுதி

சென்னை, பிப். 2- என்னுடைய  கன்னிமாடம் திரைப் படத்தின் தொடக்கத்திலும் பெரியார்தான்; முடிவிலும் பெரியார் பொன்மொழிதான். இனி நான் இயக்கும் எல்லா திரைப்படங்களையும், பெரியார் ஆரம்பித்து வைப்பார்; பெரியாரே முடித்து வைப்பார் என்றார்  ‘பெரியார் விருது' பெற்ற நடிகர் - இயக்குநர் போஸ் வெங்கட் அவர்கள்.

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 27ஆம் ஆண்டு திராவிடர் திருநாள் விழா 16.1.2021 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. விழாவில்  பெரியார் விருது' பெற்ற   நடிகர் - இயக்குநர் போஸ் வெங்கட் அவர்கள்  உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

அனைவருக்கும் வணக்கம்!

அனைவருக்கும் தமிழர் திருநாள் தமிழர்ப் புத்தாண்டு வாழ்த்துகள்!

எந்த மேடையில் ஏறினாலும் ஒரு சிறிய பதற்றம் இருக்கும். ஆனால், இன்றைக்கு மிக அதிகமாகவே இருக்கிறது எனக்குப் பதற்றம்.

வரவேற்புரையாற்றிய நீதியரசர் அவர்களுக்கும், தலைமை தாங்கும் அய்யா அவர்களுக்கும், தொடக்கவு ரையாற்றிய கவிஞர் அவர்களுக்கும், இவ்விழாவிற்கு வந்திருக்கின்ற அறிஞர் பெருமக்களுக்கும் என்னுடைய நன்றியையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள் கிறேன்.

கன்னிமாடம் திரைப்படத்தை வெளியுலகிற்குக் காட்டியது ஆசிரியர் அய்யா அவர்கள்தான்!

கன்னிமாடம் திரைப்படத்திற்காக ஒரு பிரிவியூக்கு ஏற்பாடு செய்திருந்தோம். நிறைய பேரை அழைத்திருந் தோம்; யாரும் வரவில்லை; திரையரங்கம் காலியாக இருந்தது. 24 ஆயிரம் ரூபாய் அதற்காக செலவிட்டோம். நிறைய பேர் வரவில்லை -  ஒரு கவனிக்கப்படாத திரைப்படமாக அந்தத் திரைப்படம்  கட்டாயமாக போயிருக்கும். என்னுடைய உழைப்பு வெளியில் தெரியாமல் போயிருக்கும். அந்த நேரத்தில், அந்தத் திரைப்படத்தை வெளியுலகத்திற்குக் காட்டியது ஆசிரி யர் அவர்கள்தான்.

அன்றைக்கு அவருக்கு நான் பல நன்றிகளை சொல்லியிருக்கலாம்; ஆனால், அது சரியாக இருந்திருக்காது. இதுதான் சரியான நேரம். (ஆசிரியர் அவர்களுக்கு நன்றி என்று கூறினார்).

நல்லவை வெளியே தெரிவதற்கு

ஆசிரியர் அய்யா போன்றவர்கள் தேவை

அதேபோன்று, அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்கள், அந்தத் திரைப்படத்தைப் பார்த்த பிறகுதான், அது திரைப்படமாக வெளியில் தெரிந்தது. நல்லவை வெளியே தெரிவதற்கு ஆசிரியர் அய்யா போன்றவர்கள் தேவை.

அவர்கள் இல்லையென்றால், நல்லவை வெளியே தெரியாமல் போய்விடும் என்பதற்கு கன்னிமாடம் திரைப்படம் ஒரு சிறந்த உதாரணம் என்பதை நான் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்.

இந்த விருதை, என்னை வைத்து இயக்கிய,  நான் டைரக்ஷன்பற்றி கற்றுக்கொண்ட என்னுடைய சகோத ரர் திரு.கரு.பழனியப்பன் அவர்களோடு சேர்ந்து வாங்கு வது என்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

அய்யா அவர்கள் சொன்னதுபோல, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும்பொழுது, நிறைய மேடை ஏற வேண்டிய சூழல் இருக்கும் என்பதால்,  எப்படி பேசவேண்டும் என்பதற்காக - யூடியூப்பை பார்த்துவிட்டுத்தான் பேசுகிறோம். அந்த வகையில், இப்பொழுது எனக்கு இதில் குரு நீங்கள்தான்.

என்னை ஒரு பைத்தியக்காரனைப் போல பார்த்தார் கள் என் அருகிலேயே இருந்தவர்கள்.

கன்னிமாடம் திரைப்படம் எதற்கு? போஸ் வெங்கட் அவர்களுக்கு பெரிய நடிகர்களையெல்லாம் தெரியுமே - அவர்களை வைத்து ஒரு கமர்ஷியல் திரைப்படம் எடுத்திருக்கலாமே? அவர் எதற்கு கன்னிமாடம் போன்ற ஒரு திரைப்படத்தை எடுக்கவேண்டும் என்று என்னை ஒரு பைத்தியக்காரனைப் போல பார்த்தார்கள் என் அருகிலேயே இருந்தவர்கள் - அதுதான் உண்மையும்கூட - கடைசிவரைக்கும் அந்தத் திரைப்படத்தை யாரும் நம்பவேயில்லை.

பெரியார் அய்யாவின் மொழி எனக்குப் புரிந்தது என்னுடைய 22 ஆம் வயதில்தான்!

ஆனால், ஒரு லோடு மேனாக, ஒரு ஆட்டோ டிரைவராக, கடைநிலையில் இருக்கும் ஒரு மனிதனாக - பெரியார் அவர்களுடைய மொழி- அதாவது நான் புத்தகங்களை படிக்க ஆரம்பித்ததே 22 வயதிற்கு மேல் தான். என்னுடைய தந்தை அவர்கள், பெரியார் அய் யாவை அறிமுகப்படுத்தினார், கலைஞர் அவர்களை அறிமுகப்படுத்தினார், ஆசிரியர் அய்யா அவர்களை அறிமுகப்படுத்தினார். அப்பொழுதெல்லாம் என் மண்டையில் உரைக்காதது - நான் ஆட்டோ ஓட்டியதற் குப் பிறகும், நான் கூலி வேலை செய்ததற்குப் பிறகும் தான், பெரியார் அய்யாவின் மொழியே எனக்குப் புரிந் தது. அதற்கு முன்புவரை எனக்குப் புரியவில்லை.

பெரியார் கொள்கைகளை ஊட்டி ஊட்டி வளர்த்தவர் என்னுடைய அப்பா!

இந்த நேரத்தில், என்னுடைய அப்பா இருந்திருந்தால், எவ்வளவு சந்தோசப்பட்டு இருப்பார் என்பதை என்னால் சொல்வதற்கு வார்த்தையில்லை. ஏனென்றால், பெரியார் கொள்கைகளை ஊட்டி ஊட்டி வளர்த்தார் என்பதுதான் உண்மை.

ஒரு விஷயத்தை நாம் நிரூபிக்கும் வரையில் நாம் யார் என்று யாருக்கும் தெரியாது. நான், பெரியார் கொள்கையால் வளர்க்கப்பட்டவன் என்பதற்கு நான் இங்கே நிற்கிறேனே அதுவே எனக்குப் போதும். எனக்கு மிக்க மகிழ்ச்சி.

ஏனென்றால், இதைத் தெரியப்படுத்துவதற்கான திரைப்படமாகத்தான் கன்னிமாடம் இருந்தது என்பது இன்னும் மிகப்பெரிய சந்தோசம். அதற்காகத்தான் அந்தத் திரைப்படத்தை எடுத்தேன் என்றுகூட சொல்லலாம்.

கன்னிமாடம் திரைப்படம் எதற்காகத் தேவைப்படு கிறது என்கிற கேள்வி இருந்துகொண்டே இருக்கும். அந்தத் தேவையை    யாரோ ஒருவர் நம்மிடம் வந்து முன்னிலைப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

அவர்கள் நிச்சயமாக, ஆசிரியர் அய்யா அவர்களும் அல்ல; அய்யா கவிஞர் அவர்களும் அல்ல; கரு.பழனியப்பன் அவர்களும் அல்ல; அய்யா பெரியாரும் அல்ல; கலைஞர் அவர்களும் கிடையாது.

மூர்த்திகள் - குருமூர்த்திகள் -

இந்த குருமூர்த்திகள்தான், நம்மைத் திரும்பத் திரும்ப  - “டேய், உங்களுக்கு இன்னமும் வேலை இருக் கிறது' என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.

எத்தனை பெரியார் தேவைப்படுகிறார் என்று எங்களுக்கே தெரியவில்லை

புழு போன்று இருக்கிறார்கள்; திடீரென்று பூச்சி மாதிரி ஆகிறார்கள்; திடீரென்று பாம்பு போன்று ஆகிறார்கள். எப்படி வளருகிறார்கள் என்பது தெரிய வில்லை; எங்கே இருந்து வருகிறார்கள் என்று தெரிய வில்லை. எத்தனை பெரியார் தேவைப்படுகிறார் என்று எங்களுக்கே தெரியவில்லை.

எனக்கும் குடும்பம் இருக்கிறது; இங்கே என்னுடைய மனைவி வந்திருக்கிறார்.

என்னைப் போன்ற ஒரு நடிகன்  கன்னிமாடம் போன்ற ஒரு திரைப்படம் எடுத்தால், வணிக ரீதியாக ஓடாது; டைரக்ஷன் வாய்ப்பும் கிடைக்காது.

வீட்டிற்குப் போய் பிள்ளைகளின் முகத்தைப் பார்த் தால், அவர்களுக்கு நாம் என்ன சேர்த்து வைத்திருக்கி றோம் என்பதற்கு பதிலே கிடையாது. ஆனால், ஒரே ஒரு தைரியம் மட்டும் இருந்தது; அதை ஒருவர் கொடுத்துக்கொண்டே இருந்தார். அவர்தான் பெரியார்; அவர்தான் தந்தை பெரியார். அந்த ஒரு தைரியத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் கன்னிமாடம்.

திரைப்படத்தின் தொடக்கமும் பெரியார்தான் - முடிவிலும் பெரியார்தான்!

ஒரு திரைப்படம் எடுக்கத் தொடங்குவதற்கு முன்பு, பிள்ளையார் சிலை முன்பு  கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து திரைப்படத்தை எடுப்பார்கள். நான் பெரியார் சிலை முன்பு கேமிராவை வைத்து திரைப்படம் எடுக்க ஆரம்பித்தேன். திரைப்படத்தின் முடிவில், ஒரு கோவி லைக் காட்டித்தான் முடிப்பார்கள்.

நான் திரைப்படத்தின் முடிவில், பெரியாரின் பொன் மொழிகளோடுதான் முடித்தேன்.

‘‘ஜாதி என்பது மனிதனை சாக்கடையாக்கும்

மதம் என்பது மனிதனை மிருகமாக்கும்'' என்றுதான் நான் படத்தை முடித்தேன்.

இன்றைக்கு தமிழர்கள், திராவிடர்கள் யாராக இருந்தாலும், அன்றைக்குப் படம் பார்த்த 200 பேரும், பெரியாரின் பொன்மொழியைப் பார்த்து ஏன் கைதட் டினார்கள்? திராவிடர்கள்  இருக்கிறார்கள்; திராவிடர் களாகவே இருக்கிறார்கள் என்பதற்கு பெரியாரின் பொன்மொழிதான் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக இருந்தது அந்தத் திரைப்படம் முடியும் பொழுது.

டொரோண்டா பிலிம் ஃபெஸ்டிவெல்லில் கன்னி மாடம் திரைப்படம் பார்வையாளர்களால் அதிகம் நேசிக்கப்பட்ட திரைப்படமாக - சிறந்த திரைப்படத்திற் கான விருது  கன்னிமாடம் திரைப்படத்திற்குக் கிடைத் தது. மிக்க மகிழ்ச்சியடைந்தேன். அடுத்ததாக, பெரியார் திடலில், இந்த விருது எனக்குக் கிடைத்திருக்கிறது. எனக்குப் பயமாக இருக்கிறது. திரைப்பட விழாவில் கிடைத்த விருதினால், சந்தோசப்பட்டேன்; ஆனால், இங்கே இந்த விருது வாங்கியவுடன், எனக்குப் பயமாக இருக்கிறது. இங்கே இருக்கின்ற கண்கள் எல்லாம் கூர்ந்து கவனித்துக்கொண்டே இருக்கும்.

கரு.பழனியப்பன் சார் இங்கே நிறைய பேசுவார். ஆகையால், நான் இதுபற்றி பேசவேண்டியதில்லை. என்னுடைய திரைப்படங்களில் பேசிக் கொள்கிறேன்.

என்னுடைய எல்லா திரைப்படங்களையும், பெரியார் ஆரம்பித்து வைப்பார்; பெரியாரே முடித்து வைப்பார்.

ஆசிரியர் அய்யாவின் கரங்கள்

என் கரங்களைப் பற்றியே இருந்தது!

அந்த வகையில்,  இதை நான் விருது என்று சாதா ரணமாக சொல்லிவிட முடியாது. ஆசிரியர் அவர்கள் என்னை எந்த அளவிற்கு நேசித்தார் என்பதை கன்னிமாடம் வெளியிடப்பட்ட பிரிவியூ தியேட்டரில் நான் கவனித்தேன். அவருடைய கரங்கள், என்னுடைய கரங்களைப் பற்றியே இருந்தது; அவருடைய கரங்கள், என் கரங்களை விடவேயில்லை.

என்னிடம் ஏதோ சொல்லவேண்டும் என்று நினைத் தார்; அதை இன்றைக்குச் சொல்லிவிட்டார்.

நன்றி, வணக்கம்!

இவ்வாறு நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் அவர்கள்  உரையாற்றினார்.

Comments