எந்த மதமும், கடவுளும், அரசாங்கமும் ஏழைகள் தலையில்தான் சவாரி செய்கின்றனவேயொழிய முதலாளிமார்களை ஏன் என்றே கேட்பதில்லை. அவர்களுடைய விருத்திக்கு உதவி செய்தே வருகின்றன. கேவலம் ஒரு தீண்டாமை என்கின்ற காரியம் எவ்வளவு அக்கிரமமென்றும், அயோக்கி யத்தனமானதென்றும், ஆதாரமற்றதென்றும், எல்லா மனித னுடைய அறிவுக்குட்பட்டிருந்தும் இன்று அதை ஒழிப்பது என்றால் எவ்வளவு கஷ்டமாய் இருக்கின்றது? ஆக இந்த தீண்டாமைக்கும், ஜாதிப் பிரிவுக்கும், அதனால் ஏற்படும் இழிவுக்கும், தரித்திரத்துக்கும், ஒற்றுமை இன்மைக்கும் - ஹிந்து மதம், மனுதர்ம சாத்திரம், பாரத ராமாயணப் புராண இதிகாசம் என்பவைகளோடு மாத்திரமல்லாமல் ராமன், கிருட் டிணன் முதலிய கடவுள்களும் காரணங்கள் - இல்லையா?
- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1
‘மணியோசை’