2025-க்கு முன் இந்திய பொருளாதாரம் வளர வாய்ப்பு இல்லை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 1, 2021

2025-க்கு முன் இந்திய பொருளாதாரம் வளர வாய்ப்பு இல்லை

பொருளாதார வல்லுநர் எச்சரிக்கை

 புதுடில்லி, பிப்.1 இந்திய நாட்டின் பொரு ளாதாரம்  2020ஆம் ஆண்டில் மைனஸ் 9.6 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்த நிலையில், நடப்பு 2021-ஆம் ஆண்டில் அது 7.3 விழுக்காடு என்ற வளர்ச்சியை எட்டும் என அய்க்கிய நாடுகள் அவையின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரத்துறை அண்மையில் அறிக்கை வெளியிட்டது.

மைனஸ் 7.7 விழுக்காடு

பன்னாட்டு நாணய நிதியமும் கூட, 2021-இல் இந்தியாவின் ஜிடிபி 11.5 விழுக்காடு என்ற இரட்டை இலக்க வளர்ச்சியை அடையும் என்று கணிப்பு வெளியிட்டிருந்தது.மத்திய நிதியமைச்சர் 29.1.2021 அன்று தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில், இந்தியப் பொருளாதாரம் 2020-21 நிதி யாண்டில் மைனஸ் 7.7 விழுக்காடு என்ற வீழ்ச்சியையே சந்திக்கும் என்றா லும், 2021-22 நிதியாண்டில் சுமார் 11 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி எதிர் பார்க்கப்படுவதாக நம்பிக்கை தெரி வித்துள்ளார்.

இதனிடையே, இந்தியப் பொருளா தாரம், 2025 ஆம் ஆண்டுக்கு முன்னதாக, கரோனா பொதுமுடக்க காலத்திற்கு முந்தைய அதன் பழைய நிலையை அடைய வாய்ப்பு இல்லை என்று பன்னாட்டு நாணய நிதியத்தின் (அய்எம்எப் ) தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் கூறியுள்ளார்.

இந்தியப் பொருளாதாரம் மற்றும் அதன் வளர்ச்சி அளவீடுகள் குறித்துஎக்னாமிக் டைம்ஸ்ஏட்டிற்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.

அதில், 2019 ஆம் ஆண்டில், அதாவது கரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் இந்திய பொருளாதாரம் 6 முதல் 7 விழுக்காடு வளர்ச்சியில் இருந்தது. இந்த அளவீட்டை மீண்டும் எப்போது இந்தியா அடையும் என் றால், நிச்சயமாக 2025-க்கு முன்ன தாக, இந்திய பொருளாதாரம் தனது பழைய நிலையை அடையக் கண் டிப்பாக வாய்ப்பு இல்லை. இந்தியா மட்டுமல்ல உலகில் பல நாடுகள் இந்த நிலையில்தான் உள்ளன.

பொருளாதார மீட்சி வேகமானது, நிதிநிலை அறிக்கையில் இந்திய ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் சீர்திருத்தங்களைப் பொறுத்து அமையும். மேலும் இந்த நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் 2 விஷயங்களை மிகவும் முக்கியமாக செய்ய வேண்டும். ஒன்று தற்போது பொருளாதார மற்றும் வர்த் தகப் பாதிப்புகளைச் சீர்திருத்தும் இதே வேளையில் எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்க வேண்டும்.

இந்தியாவில் இருக்கும் பல கோடிஏழைக்குடும்பங்கள், கரோனா தொற்று மூலம் ஏற்பட்ட பொருளா தாரப் பாதிப்பில் இருந்து மேம்பட உதவவேண்டும். மறுபுறம்நாட்டின் சுகாதாரம், உள்கட்டமைப்பு, நிதி உட்செலுத்துதல், உற்பத்தியை மேம் படுத்தஅதிகளவிலானநிதியைஒதுக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவில் இருக்கும் சிறு, குறு, நடுத்தரத் (எம்எஸ் எம்இ) தொழில் நிறுவனங்களுக்குப் பயனளிக்கும் வகையில் அதிகச் சலு கைகள் அளிக்கவேண்டும். இதன்மூலம் இந்தியாவில் அதிகளவிலான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு மக்களின் வாழ்வு மேம்படும் என்றும் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார்.

2021-22 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், வராக்கடன் பிரச் சினைக்குத் தீர்வுகாண மோசமான வங்கி என்ற அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பது பற்றி கூறியுள்ள கீதா கோபிநாத், இது ஒரு சிறந்த யோசனை தான், ஆனால் நாம் சரிசெய்ய முயற்சிக்கும் வங்கி ஒரு பொதுத்துறை வங்கியாக இருந்தால் அது உண்மையில் உதவாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment