என் மனக்கண் முன்னே ஒரு காட்சி

ஈரோட்டில்விடுதலை' காரியாலயத் தில் நான் வேலை பார்த்துக் கொண்டி ருந்தேன். அப்போதுவிடுதலை'யில்  சென்னை கார்ப்பரேஷனைப் பற்றித் தலையங்கம் தீட்டினேன். ‘ரிப்பன் கட்ட டத்துச் சீமான்கள்' என்பதுதான் அதன் தலைப்பு. அன்று மாலை. நான் ஈரோட்டில் பெரியாரின் மூன்றடுக்கு மாளிகையில்  உச்சியில் உலவிக்கொண்டிருந்த நேரத் தில், பெரியார் மூன்று மாடிகளையும் கஷ்டத்துடன் படியேறிக் கடந்து வந்து என் முதுகைத் தட்டி, ‘அண்ணாதுரை, உன் தலையங்கம் ரொம்ப நன்றாக இருந்தது. எனக்கு மிகவும் சந்தோஷம்என்று வெகுவாகப் பாராட்டினார்.

இதைக் கேட்ட நான், ‘இதற்காக ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு மாடி ஏறி வர வேண்டும்? சாப்பிடக்கீழே வரும்போது சிரமமின்றிக் கூறியிருக்கலாமே?' என்று தெரிவித்தேன். அதற்குப் பெரியார். ‘என் மனதில் நல்லதென்று தோன்றியது. அதை உடனே கூறிவிட வேண்டுமென்று நினைத்தேன். ஏனென்றால், நான் பிறரைப் புகழ்ந்து பேசிப் பழக்கப்பட்ட வனல்ல. ஆகவே, உடனே சொல்லிவிட வேண்டுமென்று வந்து சொல்லிவிட் டேன்என்று சொன்னார். இந்த ஒரு சம்பவம் போதுமே எனக்கு. ஆயுள் பூராவும் அவரிடம் திட்டு வாங்கினாலும் பரவாயில்லையே.. புகழ்ந்தபிறகுதானே திட்டுகிறார்! எனவேதான் அவர் திட்டு வதைப் பற்றிக் கவலைப்படவில்லை

- இரா.கண்ணன் எழுதிய

அண்ணா வாழ்க்கை வரலாறு'

என்ற நூலிலிருந்து, பக்கம் 72.

Comments