"உடுமலை வரலாறு" புத்தக வெளியீடு

 தமிழர் தலைவர் வாழ்த்து

உடுமலை, ஜன. 23- உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் உடுமலை வரலாறு எனும் புத்தகம் வெளி யிடப்பட்டது. நிகழ்வுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்

கடந்த 9-01-2021 சனிக்கிழமை அன்று உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில், உடுமலை ஜி.வி.ஜி கலையரங்கில் உடுமலை வரலாறு நூல் அறிமுக விழா நடை பெற்றது. நிகழ்வுக்கு வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் தி.குமாரராஜா தலைமை தாங்கினார். ஆய்வு நடுவத்தின் மதிப்புறு தலைவர் வழக்குரைஞர் சத்தியவாணி வரவேற்றுப் பேசினார். மாரியம்மன் கோயில் அறங்காவலர் யு.எஸ்.சிறீதர் புத்தகத்தை வெளியிட, நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முக சுந்தரம் பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன், ஜி.வி.ஜி. கல்லூரி முதல்வர் முனைவர் கலைச்செல்வி, மணிமேகலை பிரசுரத்தின் நிறுவனர் லேனா தமிழ்வாணன், நியூஸ் 7 தொலைக்காட்சியின் இணை செய்தி ஆசிரியர் சா.. தியாகச்செம்மல், சென்னை எஸ்.அய்.டி கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா ஆசியோர் கலந்து கொண்டனர்.

புத்தகத்தில் உடுமலைப்பேட்டையின் தொல்லியல் சான்றுகளுடன் கூடிய தொன்மை வரலாறு, மேற்கு தொடர்ச்சி மலைகளில் வசிக்கும் பழங்குடி மக்களின் வரலாறு, திராவிடர் இயக்கம் சார்பில் உடுமலைப்பேட்டையின் வளர்ச்சியில் பங்களிப்புச் செய்த ஆளுமைகளின் வரலாறு போன்றவைகள் இடம் பெற்றிருந்தது.

நிகழ்வுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களும் செந்தலை கவுதமன் அவர்களும் வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பியிருப்பதாக மேடையில் அறிவிப்புச் செய்யப்பட்டது. நிகழ்வினை ஆய்வு நடுவத்தின் பொறுப்பாளர்கள் வி.கே.செல்வ ராஜ், வி.கே.சிவக்குமார், அருட்செல்வன், .அருள்கணேசன், முனைவர்  மதியழகன், முனைவர் .ஜெய்சிங், முனைவர் கற்பகவள்ளி, நல்லாசிரியர் விஜயலட்சுமி, கல்வியாளர் சாரதி () வளவன், ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இறுதியில் பொறி யாளர் சி.ராஜசுந்தரம் நன்றி கூறினார்.

Comments