மதுரையில் எழுச்சியுடன் நடைபெற்ற கழக வழக்குரைஞர் அணி சார்பில் தந்தை பெரியார் ‌‌‌நினைவுநாள் கருத்தரங்கம்

மதுரை, ஜன. 23- மதுரையில் கழக வழக்குரைஞர் அணி நடத்திய பெரியார் நினைவுநாள் கருத் தரங்கம் வடக்கு மாசிவீதி மலர் வணிக வளாக அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

வழக்குரைஞர் அணி மாநில செயலாளர் மு.சித் தார்த்தன் தன் தலைமையு ரையில் இது போன்ற கருத் தரங்கம் தமிழகம் முழுவதும் உள்ள கழக வழக்குரைஞர் அணி பொறுப்பாளர்கள் நடத்தவேண்டும் எனவும் இக்காலகட்டத்தில் அதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

அரங்கம் முழுவதும் வருகை தந்த மூத்த இளம் வழக்குரைஞர்களையும் இயக்கத் தோழர்களையும் மகளிரணியினரையும் வர வேற்று உரையாற்றிய மாநில துணை செயலாளர் வழக்கு ரைஞர் நா.கணேசன் தன் உரையில் பெரியாரின் தேவை குறித்தும் அடுத்து  மதுரையில் இதுபோன்ற நிகழ்வுகளும் இளம் வழக்குரைஞர்களுக்கு சட்டம் சமூகநீதி குறித்த பயிற் சிப் பட்டறைகளும் மதுரை யின் மூத்த வழக்குரைஞர் களைக் கொண்டு நடத்தப் படும் என்றும் கூறினார்.

மதிமுக மூத்த வழக்குரை ஞர் ஆசைத்தம்பி பாசிச பாஜ கவிற்கு. எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியத்தை எடுத் துரைத்ததோடு எப்போதும் நாங்கள் திராவிடர் கழகத்திற்கு துணைநிற்போம் என்றார்.

தமிழ்நாடு பார்கவுன்சில் உறுப்பினர் வழக்குரைஞர் பா.அசோக் தன் உரையில் திராவிடர் கழகத்திற்கு நான் புதியவன் அல்ல நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும், நான் என்றைக்கும் பெரியார் இயக்கத்திற்கு பின்புலமாக இருக்ககூடியவன் என எடுத்துரைத்தார்.

மூத்த வழக்குரைஞர் லஜ பதிராய் அவர்கள் தற்போது நீதித்துறை காவித் துறையாக மாறிவருகிறது. அது அரசு சார்ந்து நிற்காமல் தனித்து நீதிசார்ந்து இயக்க நாமெல் லாம் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியதின் அவ சியத்தை எடுத்துரைத்தார்.

நிறைவாக பேசிய பேராசி ரியர் சுந்தரவள்ளி இக்கால கட்டத்தில் பெரியாரின் தேவையையும் அவசியத்தை யும் எடுத்துக்கூறி ஊடகத்தின் வாயிலாக சங்கிக்கூட்டங் களை அழித்தொழிக்கும் போராளியாக களத்தில் நிற் பேன் என்றும் என்பின்னால் பெரியார்  உயர்ந்து நிற் கின்றார் என்ற பலத்தோடு சங்கிகளோடு போராடதயார் வருவதற்கு தயாரா என்று அறைகூவல்விட்டார்.

மிகுந்த எழுச்சியுடன் நடந்த நிகழ்ச்சியில் வழக்கு ரைஞர்கள் வின்சன்ட், அன்பு நிதி, தம்பிதுரை, ராஜேந்திரன் கனகராஜ் கனகவேல் ஜெயக் குமார், சுஜாதா, கிரி, ஞான வேல், விவேக், சண்முகராஜ், நாகலிங்கம், அஜ்மல், சந்திர மோகன், மனோஜ், விவேகா னந்தன், வேதாசலம், விஜய குமார் உள்ளிட்ட எண்ணற்ற வழக்குரைஞர்களும் மதுரை மாவட்டத் தலைவர் . முருகானந்தம், செயலாளர் சுப.முருகானந்தம், இரா.திருப்பதி, கா.சிவகுருநாதன், நா.முருகேசன், சே.முனிய சாமி, கோரா, .சிவா, பேக்கரி கண்ணன், காளியப்பன், .சரவணன்.செங்கதிர். மகளி ரணி ராஜேஸ்வரி, நாகராணி, அல்லிராணி, சுமதி மற்றும் தோழர்களோடு அரங்கம் நிறைந்து எழுச்சியுடன் நடந்த நிகழ்ச்சியை மாநில அமைப்புச் செயலாளர் வே. செல்வம் அனைத்து ஏற்பாடு களையும் செய்ததோடு நிகழ்ச் சியையும் ஒருங்கிணைத்தார். வழக்குரைஞர் தியாகராஜன் நன்றி கூறினார்.

Comments