மூத்த குடிமக்களுக்கான சுகாதார சேவைக்கான செயலி அறிமுகம்

சென்னை, ஜன. 31- உலக சுகாதார அமைப் பின் அறிக்கையின்படி, இந்தியாவில் கிட் டத்தட்ட 57 மில்லியன் மக்கள் மன அழுத் தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்த் தொற்று காலத்தில் இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இது அனைத்து வயதினரையும், குறிப்பாக மூத்த குடிமக்களையும் அதிகம் பாதித்துள்ளது. இதை போக்க முதியோரின் நல்வாழ்வை மேம்படுத்தசீனியாரிட்டி (SENIORITY) எவர்க்ரீன் கிளப்என்ற சிறப்பு டிஜிட்டல் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு வலைத்தளம் மற்றும் செயலி அடிப் படையிலான தளமாகும். இதில் மூத்த குடிமக்கள் தங்களை மகிழ்வித்துக் கொள்ள குறைந்தபட்டி தேர்வுகளே இருப்பதால், இதுபோன்ற சவாலான காலங்களில் அவர் களின் உணர்ச்சி நல்வாழ்வைப் பராமரிக்க ஏதாவது செய்ய நாங்கள் விரும்பினோம் என சீனியாரிட்டி நிறுவனர் தபன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

Comments