நெய்வேலி (என்.எல்.சி.)யில் பணியாற்றி, பணி ஓய்வுக்குப் பின் குடந்தையையடுத்த கொரநாட்டுக் கருப்பூரில் வசித்து வந்த நெய்வேலி க.தியாகராசன் (வயது 87) இன்று (20.12.2020) அதிகாலை மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதை அறிந்து வருந்து கிறோம்.
திராவிட இயக்க உணர்வோடு தமிழ்நாட்டின் இதழ்களுக்கெல்லாம் ஓயாமல் எழுதிக் கொண்டே இருப்பார். 'விடுதலை'யின் தொடர் வாசகராகவும், எழுத்தாளராகவும், இருந்த அவருக்கு சென்னையில் நடைபெற்ற 'விடுதலை' 80ஆம் ஆண்டு விழாவில் விருது வழங்கப்பட்டது. அவர்தம் வாழ்விணையர் பெயர் மணியம்மை என்ப திலிருந்தே அவரின் இயக்கப் பாரம்பரியத்தைத் தெரிந்து கொள்ளலாம். அவர் பிரிவால் துயருறும் அவரின் வாழ் விணையருக்கும், ஆருயிர் செல்வங்கள் கனிமொழி, மாதவி ஆகியோருக்கும், தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு 'விடுதலை'யின் வீரவணக்கம்!
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
20.12.2020
இன்று (20-12-2020) மாலை 4.00 மணியளவில் கொரநாட்டு கருப்பூர் அவரது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது. திராவிடர் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், குடந்தை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
தொடர்புக்கு: கோவிந்தராஜ்(பேரன்),
ருப்பூர் - 9442789262,9080282566

No comments:
Post a Comment