தந்தை பெரியாரின் சமூகநீதி சிந்தனைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 20, 2020

தந்தை பெரியாரின் சமூகநீதி சிந்தனைகள்

 தொகுப்பாசிரியர்கி.வீரமணி

தந்தை பெரியார் நினைவு நாளில் டிசம்பர் 24 புதிய வெளியீடாக தந்தை பெரியாரின் சமூகநீதி சிந்தனைகள் நூல் வெளிவருகிறது.

பல நூற்றாண்டுகளாக ஜாதியின் பெயரால் அடக்கப்பட்டு, வஞ்சிக் கப்பட்டு உரிமை மறுக்கப்பட்டவர்கள் விடியலுக்கான பூபாள மாக முழங்கிய தந்தை பெரியாரின்  உரைகள், கட்டுரைகள் ஆகியவற்றிலிருந்து சமூகநீதி சார்ந்த கருத்துகளை தேர்ந்தெடுத்து தொகுத்து வழங்கியுள்ளார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

உலகின் ஒப்பற்ற சுயசிந்தனையாளரான தந்தை பெரியார் குழந்தைப் பருவத்தில் எதிர்கொண்ட ஜாதிப் பாகுபாடு பற்றிய அவரது தன் வரலாற்றிலிருந்து தொடங்குகிறது இந்த நூல்.

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பார்ப் பனியம் செய்த கொடுமைகள், அவற்றிலிருந்து திரா விடர்களை விடுவிக்க பார்ப்பனரல்லாத தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள்,  திராவிடர்கள் வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக ஆரியம் மேற்கொண்ட சூழ்ச்சிகள், தகுதி திறமை என்ற பெயரால் பார்ப்பனரல்லாதாருக்கு காலங்காலமாக செய்யப்பட்ட சமூக அநீதி ஆகியவற்றை ஆதாரங்களுடன் விளக்குவதுடன், பொருளாதார ஏற்றத்தாழ்விற்கு  அடிப்படையாக விளங் குவது ஜாதி, மதம் மற்றும் கடவுள் மூடநம்பிக்கைகள் என்பதை விளக்கும் தந்தை பெரியாரின் கட்டுரைகள், பொன்மொழிகளை கொண்ட தொகுப்பாக அமைந் துள்ளது.

ஜாதி மதமற்ற சமத்துவ சமுதாயம் படைக்க வேண் டுமெனில் வகுப்புவாரி உரிமை தவிர்க்க முடியாதது என்பதை ஆதாரபூர்வமாக நிறுவும் நூலாக, சமூகநீதி போராளிகளுக்கு ஆயுதமாகவும் ஆய்வாளர்களுக்கு ஆவணக் களஞ்சியமாகவும் திகழும் நூல்.

பார்ப்பனர் அல்லாத மக்களின் எழுச்சியை தடுக்கும் ஆரியத்தின் அகங்காரம் மாறவில்லை என்பதையும் வகுப்புவாரி உரிமைக்கு எதிராக செயல்பட்ட பார்ப் பனப் பத்திரிகைகளின் போக்கையும் குடிஅரசு பதிவு களிலிருந்து விளக்குகிறது.

மொத்த பக்கங்கள் : 368

நன்கொடை: ரூபாய் 300/-

உங்கள் பதிவுக்கு முந்துங்கள்

திராவிடர் கழக (இயக்க) வெளியீட்டகம்

No comments:

Post a Comment