சென்னை, டிச. 14- மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். (BSNL), ஸ்கைலோடெக் இந்தியா (Skylotech India) என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து, செயற்கைக்கோள் தொடர்பு அடிப்படையிலான - குறுகிய அலைநீளம் கொண்ட. மின் னணு வகை இணைய தொடர்பு மூலமாக இந்த அய்.ஓ.டி. தொழில் நுட்பம் (Satellite-based Narrowband-IoT) அறிமுகப்படுத்துகிறது.
இந்தப் புதிய தொழில்நுட்ப அறிமுகம் குறித்துப் பேசிய பி.எஸ்.என்.எல்.-லின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் பி.கே. புர்வார் “வரும் 2021-ஆம் ஆண்டில் கோவிட் பெருந்தொற்றுக்கான தடுப்பூசி வழங்கத் தொடங்கும் நிலையில், அதற்கான பணிகளில் முன்னேற்பாடுகளில் ஸ்கைலோ மிகப் பெரிய அளவில் துணை நிற்கும் வாய்ப்புள்ளது. அதன்மூலம் நாட்டுக்கு மிகவும் அவசியமான நேரத்தில் பங்காற்றும் வாய்ப்பு இந்நிறுவனத்துக்கு கிட்டும்” எனத் தெரிவித்தார்.
ஸ்கைலோ நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் ஒருவரும், தற்போது அதன் தலைமை செயல் அதிகாரியுமான பார்த்தசாரதி திரிவேதி பேசுகையில், “கடந்த பல நூற்றாண்டுகளாக விவசாயம், தொழில்துறை, ரயில்வே, மீனவர்கள் என பல தரப்பினரும் தகவல் தொடர்பு விஷயத்தில் அதிக வாய்ப்பில்லாமல் தன்னிச்சையாகத்தான் செயல்பட்டு வந்துள்ளனர். ஆனால், இப்போது இத்துறையில் ஏ.அய். (AI - Artificial Intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு, அய்.ஓ.டி. எனப்படும் இணையவழி செயல்பாடு மூலம் இயந்திரங் களுக்கு கட்டளை பிறப்பித்து இயக்குவது போன்ற பல புதிய முன்னேற்றங்கள், தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. இந்த எங்களது தொழில்நுட்பத்தை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்வதில் அதன்மூலம் உள்ளூர் தொழில்களுக்கு உதவுவதில் மிக்க மகிழ்ச்சி யடைகிறோம்” எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment