டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயி கள் நாடு முழுவதும் இன்று 14.12.2020 பட்டினிப் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.
· விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்தி வேளாண் சட்டம் குறித்து மாற்றம் செய்திட வேண்டும் என ஏ.ஜி.நூராணி கருத்து தெரிவித்து உள்ளார்.
· மோடி அரசு தேவையற்ற பொய்ப் பிரச்சாரத்தை கைவிட்டு, தன் தவறுகளை உணர்ந்து வேளாண் சட்டங்களில் மாறுதல் செய்திட வேண்டும் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.
· வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசு விவசாய அமைப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி நல்ல முடிவெடுக்க வேண்டும் என அமெரிக்க உறுப்பினர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆர்.ஓ.கன்னா கூறியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் அனைவரும் தாங்களும் விவசாயிகள்தான் எனக் கூறி பெரும் அளவில் ஆதரவு அளித்து வருகிறார்கள்.
· எம்.அய்.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி, தாழ்த்தப்பட்டோர், முஸ்லீம் ஒற்றுமை பற்றி பேசுகிறார். ஓபிசி பிரிவினர் பற்றி பேசுவதில்லை. இதனை பாஜக சாதகமாக பயன்படுத்தி, முஸ்லீம்களுக்கு எதிராக ஓபிசி பிரிவினரை உருவாக்கி அய்தராபாத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதே முறையை, கிராமங்களுக்கும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது என பேராசிரியர் காஞ்ச இலய்யா தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
· அயோத்தியில் கடும் குளிர் காரணமாக, ராமன் சிலை மற்றும் அவரது சகோதரர்கள் சிலை குளிரில் பாதிக்காமல் இருக்க, அறையில் வெப்ப கருவியும், சிலைகளைச் சுற்றி போர்வையும் வைக்கப்பட்டுள்ளதாம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· இன்று உலகம் முழுவதும் உற்று நோக்கும் யதார்த்தம் என்னவென்றால், இந்தியாவில் விவசாயிகள் அதிகரித்து வருகிறார்கள் என்பதும், அவர்களுடன் விஷயங்களைக் கூட விவாதிக்க அரசாங்கத்தில் யாரும் இல்லை என்பதும் ஆகும். ஆனால் ஒவ்வொரு போராட்டத்தையும் தனது மாசற்ற தலை மைத்துவ குணங்களை கேள்விக்குள்ளாக்குவதாக பிரதமர் நினைத்தால் என்ன ஆகும்? தூய்மையானவரா? எங்கள் பிரதமர்? என மூத்த பத்திரிக்கையாளர் டி.ஜே.எஸ்.ஜார்ஜ் குறிப்பிட்டுள்ளார்.
தி ஹிந்து:
· சில்லறை வர்த்தகத்தில் ‘நெக்ஸஸ்’ இருப்பதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பான சுதேசி ஜாக்ரான் மன்ச் குற்றம் சாட்டி யுள்ளது.
· கிளர்ச்சியாளர்கள் காலிஸ்தானியர்களாக இருந்தால் ஏன் அரசு அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்? என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
குடந்தை கருணா
14.12.2020
No comments:
Post a Comment