தொல்லியல் அலுவலர் பதவி தேர்வில் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் புறக்கணிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 31, 2020

தொல்லியல் அலுவலர் பதவி தேர்வில் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் புறக்கணிப்பு

தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் கண்டனம்

சென்னை,டிச.31, தொல்லியல் அலுவலர் பதவி தேர்வில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்களின் புறக்கணிப்புக்கு திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான தளபதி மு..ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையம் 18 தொல்லியல் அலுவலர் பதவிக்குத் தேர்வு அறிவித்தது. அப்ப தவிக்கு எம்ஏ தமிழ், எம்ஏ வரலாறு ஆகிய கல்வித்தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டன. இத்துடன் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் வழங்கப்பட்ட கல்வெட்டியல் - தொல்லியல் முதுநிலைப் பட்டயம் எனும் கல்வித் தகுதி இருந்தும், நடந்து முடிந்துள்ள தேர்வில், நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை நிராகரித் துள்ளனர். இது மிகுந்த வேதனைக்குரியது.

பிற மாநிலங்களில் பயின்ற தொல் லியல்துறை மாணவ மாணவிகளைக் கலந்தாய்வுக்கு அழைத்துள்ள அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஏன், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் பயின்ற மாணவ, மாணவியரை நிராகரிக் கிறது. அங்கு ஓராண்டு முதுகலைத் தொல் லியல் மற்றும் கல்வெட்டியல் பட்டயம் பெற்ற மாணவ மாணவியருக்கு ஓரவஞ்சனை செய்து ஒதுக்குவது ஏன். தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளில் நான்கில் மூன்று பங்கு தமிழில்தான் இருக்கின்றன. அப்படியிருக்கும் போது தமிழ் படித்த மாணவ, மாணவியருக்கு முன்னுரிமை கொடுக்காமல் அவர்களின் வேலை வாய்ப்பைப் பறிப்பது அராஜகமானது; கடும் கண்டனத்திற்குரியது.

தமிழக தொல்லியல் நிறுவனத்தில் பயின்ற மாணவ, மாணவியர் இன்றைக்கு மிகப்பெரிய ஆய்வாளர்களாக, அறிஞர் களாக இருக்கிறார்கள். ஆனால், தமிழகத் தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்காக உரு வாக்கப்பட்ட தேர்வாணையமே பிற மாநி லத்தவருக்கு வாய்ப்பளிப்பதும், இந்தத் தேர்வில் தமிழக மாணவ - மாணவியரைப் புறக்கணிக்கும் வகையில் தேர்வுகளை நடத்துவதும் மிகுந்த கவலைக்குரியது. பட்டயப் படிப்பு எந்த மொழியில் கற்றுத்தரப்பட்டது என்ற சான்றிதழைக் கொடுக்க மறுத்து இப்படியொரு அநீதியை இந்தத் தேர்வில் அதிமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது.

தேர்வில் நிராகரிக்கப்பட்டவர்களில் நான்கில் மூன்று பங்கு மாணவ மாணவியர் தமிழ்த் துறையினைச் சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது. எனவே, தொல்லியல் அலுவலர் பதவிக்கான தேர் வில் நடைபெற்றுள்ள இந்தக் குளறுபடி களுக்கு உடனடியாகத் தீர்வு கண்டு, தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையில் பயின்ற தமிழக மாணவ மாணவியருக்கு வேலை வாய்ப்பு வழங்கிட, அவர்களைக் கலந்தாய்வுக்கு அழைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தேர்வாணையத் தலைவரைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.


No comments:

Post a Comment