‘‘திராவிடம் வெல்லும்!'' என்பதே நமது முழக்கம்!
எங்கெங்கும்
எதிரொலிக்கட்டும்!
மார்ச்
16 இல் எனது சுற்றுப்பயணம் தொடங்கும்
திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்டத்தில் தமிழர் தலைவர் அறிவிப்பு
நமது சிறப்புச் செய்தியாளர்
சென்னை,
டிச.13 நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.
வெற்றி பெற்றே தீரவேண்டும் - அடுத்த சில மாதங்களுக்கு இதுவே நமது முக்கிய பணி என்றும், ‘‘திராவிடம் வெல்லும்!'' என்பதே நமது தேர்தல் முழக்கம் என்றும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
நேற்று (12.12.2020) சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத் திற்குத் தலைமை வகித்து ஆற்றிய உரை வருமாறு:
இன்றைய
கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நமது கடமை என்னவென்பது பற்றியதாகும்.
தி.மு.க. வெற்றி
பெற்றே தீரவேண்டும்!
வரும்
தேர்தல் மிகவும் முக்கியமானது. தி.மு.க.
வெற்றி பெற்றே ஆகவேண்டிய தேர்தல் ஆகும். தி.மு.கவுக்காக
அல்ல; நாட்டுக்காக
- சமூகநீதிக்காக - மதச்சார்பின்மைக் கொள்கைக்காக - சமத்துவக் கொள்கைக்காக - பாலியல் நீதிக்காக - மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்காக - இந்தி, சமஸ்கிருதம் என்னும் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெ டுப்பை வீழ்த்துவதற்காக தி.மு.க.
வெற்றி பெற்றே தீரவேண்டும் - தளபதி மு.க.ஸ்டாலின்
முதலமைச்சராக அமர்ந்தே தீரவேண்டும்.
இதைத்
தவிர வேறு வேலையில்லை
அடுத்து
சில மாதங்களுக்கு நமது
பணி என்பது இதைத் தவிர வேறு கிடையவே கிடையாது. திராவிடர் கழகத்துடன் தி.மு.க.
நெருக்கமாக இருக்கக் கூடாது என்று கருதுகிறவர்கள் - என்னென்ன தந்திரங்களை எல்லாமோ செய்து பார்த்தனர், எழுதிப் பார்த்தனர்.
தி.மு.க.வின்
பயணத்தை முடிவு செய்வது பெரியார் திடலே என்று தி.மு.க.
தலைவர் திட்டவட்டமாகவே அறிவித்துவிட்டார்.
‘‘திராவிடம்
வெல்லும்!'' -இதுவே நமது முழக்கம்!
நடக்கவிருக்கும்
போராட்டம் திராவிடத்திற்கும் - இந்துத் துவாவிற்கும் நடக்கும் போராட்டமாகும்.
திராவிடம்
என்றால் சமத்துவம்,
திராவிடம்
என்றால் அனைவருக்கும் அனைத்தும்,
திராவிடம்
என்றால் சம உரிமை,
திராவிடம்
என்றால் பெண்ணுரிமை,
திராவிடம்
என்றால் சமதர்மம்
திராவிடம்
என்றால் பகுத்தறிவு, சுயமரியாதை.
இந்துத்துவா
என்றால், பிறப்பில் பேதம், அனைத்திலும் பேதா பேதமாகும்.
சமத்துவத்திற்கும்,
பேதத்திற்கும் இடையே நடைபெற விருக்கும் தத்துவப் போராட்டமாகும்.
நடைபெறவிருக்கும்
தேர்தல் என்பது இந்த அடிப் படையிலே நடக்கக் கூடியதாகும்.
இப்பொழுது
இல்லை என்றால் பிறகு எப்போதும் இல்லை என்கிறார்கள். நாமும் அதையேதான் கொஞ்சம் மாற்றி சொல்கிறோம்.
இப்போது
பாடம் கற்பிக்கவில்லையென்றால், வேறு எப்போதும் இல்லை. மீட்சி இல்லை என்றால் வீழ்ச்சியே என்பதை மறந்துவிடக் கூடாது.
எப்பொழுதும்
உழைப்பதைவிட பல மடங்கு அதிகமாக
உழைக்கவேண்டிய நேரமிது.
ஒரு
நடிகரைப்பற்றி கூறுகிறார்கள், 31 ஆம் தேதி அவர் அறிவிக்கட்டும் - அதுபற்றி நாமும், நமது கருத்தை ஆணித்தரமாகவே அழுத்தமாகவே அறிவிப்போம்.
எதிரிகள்
கருத்து - திட்டம் தி.மு.க.வை வீழ்த்தவேண்டும் என்பதே!
கொஞ்சம்
நினைத்துப் பாருங்கள் தி.மு.க.
வரவில்லை என்றால், என்னாகும்?
பி.ஜே.பி., ஆட்சி மத்தியில் வந்தது முதல் என்னென்ன வெல்லாம் நடக்கிறது - மோடி ஆட்சியின் சாதனை என்ன?
சமூகநீதியைத்
திட்டமிட்டுக் குழிதோண்டிப் புதைத்தது தானே. 60 லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகையை ரத்து செய்ததுதானே.
பொருளாதாரத்தில்
நலிந்தோர் என்று கூறி உயர்ஜாதி பார்ப்பனர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை சட்ட
விரோதமாகத் தூக்கிக் கொடுத்ததுதானே!
ஏழை,
விவசாயிகளின் வயிற்றில் அடித்ததுதானே! நம் முடைய விமர்சனங்கள் எல்லாம் பி.ஜே.பி.யை நோக்கியே! இங்கு
ஒரு அடிமை ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. அதன் பின்னணியில் பி.ஜே.பி.
இருக்கிறது. அதனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.
இன்றைக்கு
ஊடகங்கள் கார்ப்பரேட்டுகளின் கைகளில் இருக்கின்றன. கார்ப்பரேட்டுகள் ஊடகங்களின் செல்லபிள் ளைகள். நாம் இந்த ஊடகங்களை நம்பி எப்பொழுதுமே இருந்ததில்லை.
நாட்டைப்
பிடித்த அய்ந்து நோய்களுள் பத்திரிகையும் ஒன்று என்றார் தந்தை பெரியார். பெரியார் சொன்ன நோய்களையும், ‘பேய்'களையும் ஒழிப்போம்!
எங்கு
பார்த்தாலும் ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!! ‘‘திராவிடம் வெல்லும்'' என்பதுதான் அந்த ஒலி முழக்கம்!
சுவர்
எல்லாம் பேசட்டும்! கூட்டங்களில் எல்லாம் கேட் கட்டும்! சுவரொட்டிகள், துண்டு அறிக்கைகள் எல்லாம் இதுவாக இருக்கட்டும்! காணொலிகளில் எல்லாம் களை கட்டட்டும் ‘‘திராவிடம் வெல்லும், திராவிடம் வெல்லும்!'' என்ற முழக்கம்.
அன்னை
மணியம்மையார் நினைவு நாளான மார்ச் 16 ஆம் தேதி முதல் எனது சுற்றுப்பயணம் தொடங்கும். அதற்கு முன்னதாகவும் தமிழ்நாடெங்கும் ‘‘திராவிடம் வெல்லும்'' என்பதை நீக்கமற இடம் பெறச் செய்வீர்! செய்வீர்!! என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

No comments:
Post a Comment