தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் தூத்துக்குடி பெரியார் மய்யத்தில் மாவட்ட செயலாளர் மு.முனியசாமி தலைமையில் நடைபெற்றது. நெல்லை மண்டலத் தலைவர் மா.பால்ராசேந்திரம், மாவட்ட துணை செயலாளர் இரா.ஆழ்வார் பெரியார் மய்ய பொறுப்பாளர் சு.காசி, காப்பாளர். போசு, காலாடி, மேனாள் மாவட்ட செயலாளர். சக்திவேல், கலைச்செல்வம், கோ.முருகன், மதிவாணன், ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் விழாவை 13.12.2020 அன்று குடும்ப விழாவாக கொண்டாடுவதென்றும் கலை நிகழ்ச்சி, பேச்சுப் போட்டி நடத்தி பரிசுப் பொருள் வழங்குவதென்றும், 2.12.2020அன்று பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
தமிழர் தலைவர் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவோம் தூத்துக்குடி மாவட்ட கலந்துரையாடல் தீர்மானம்