தந்தை பெரியார் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின்


தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் - தமது பிறந்த நாளான இன்று (27.11.2020) சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்களில் மலர்வளையம் வைத்தார். சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார். திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சால்வை அணிவித்து வாழ்த்துகளைக் கூறினார். கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்க, கழகப் பொருளாளர் வீ.குமரேசன் இயக்க நூல்களை அளித்தார்.


Comments