டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
- உ.பியில், ஹத்ராஸ் மாவட்டத்தில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை, தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த உயர்ஜாதியினர் நான்கு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, நாக்கையும் துண்டித்து கொல்லப்பட்டுள்ளார். நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு வந்த நிலையில், குடும்பத்திடம் கூட சொல்லாமல் உ.பி. காவல்துறையி னர் இரவோடு இரவாக அப்பெண்ணின் உடலை எரித்துள்ளனர்.
டெக்கான் கிரானிகல், சென்னை:
- அரியர் தேர்வுகளுக்குக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற தமிழக அரசின் அறிவிப்பு, பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி.) விதிகளுக்கு முரணானது என்று அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு (ஏஅய்சிடிஇ) சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
- மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
- ஹத்ராஸில் பழங்குடியின பெண் மீது நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக் குறித்து, சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்றும் அமைப் பின் நடவடிக்கைகள் கண்டனத்துக்குரியது. உ.பி. காவல்துறை பொறுப் பேற்க வேண்டும் என தலையங்கச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- குடந்தை கருணா
1.10.2020
No comments:
Post a Comment