7.5 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் : தலைவர்கள் கருத்து

சென்னை,அக்.31, மருத்துவப் படிப் புக்கான சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5விழுக்காடு இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். செப்டம்பரில் சொலிசிட்டர் ஜெனரலிடம் கருத்து கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது. சொலிசிட்டர் ஜெனரலிடம் இருந்து நேற்று (30.10.2020) ஆளுநருக்கு கருத்து வந்தது. 7.5விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்ட நிலையில், 7.5 விழுக் காடு இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து உள்ளார்.


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டிற்கு ஆளுநர் 30.10.2020 அன்று ஒப்புதல் அளித்ததற்கு திரா விடர் கழகம் மற்றும் பல்வேறு அர சியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


கி.வீரமணி (திராவிடர் கழகத் தலைவர்) தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி களில் மருத்துவக் கல்வியில் 7.5 விழுக்காடு இடம் அளிப்பது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமன தாக நிறைவேற்றிய மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் கிட்டத்தட்ட 45 நாள்கள் ஆளுநர் இழுத்தடித்தார்.


தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பிலும் எழுந்த கடும் எதிர்ப்புகள் காரணமாகவும், எதிர்க்கட்சிகள் ஒருமனதாகத் தொடர்ந்து வற்புறுத்தி வந்தமையாலும், ஆளும் அரசு நேற்று (29.10.2020) பிறப்பித்த அரசாணை காரணமாகவும் வேறு வழியின்றி ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.


மக்கள் சக்தி வென்றது!


காலதாமதம் செய்தாலும், தமிழக அரசின் சட்டத்திற்கு ஆளுநர் ஒப் புதல் வழங்கியதை வரவேற்கிறோம்!


மு.க ஸ்டாலின்   (திமுக தலைவர்): அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத் துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் இன்று ஒப் புதல் அளித்தார். ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் அவருக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- “45 நாட்கள் கழித்து, கலந்தாய்வுக்கான காலம் நெருங்குகையில், வேறு வழியின்றி 7.5%  இடஒதுக்கீடுக்கு ஒப்புதல் வழங் கிய ஆளுநருக்கு நன்றி!


திமுக-வின் போராட்டமும் நீதிய ரசர்கள் வைத்த மனச்சாட்சி வேண்டு கோள்களும் ஆளுநரின் மனமாற் றத்துக்கு காரணம். இறுதியில் வென்ற சமூகநீதி, எப்போதும் வெல்லும்!” என்று பதிவிட்டுள்ளார்.


கே.எஸ்.அழகிரி (தமிழக காங் கிரஸ் தலைவர்): 7.5% உள்ஒதுக்கீட்டு மசோதாவிற்கு 45 நாட்களாக ஒப் புதல் தராமல் காலம் தாழ்த்தியதற்கான காரணத்தை ஆளுநர் விளக்க வேண் டும். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிற வகையில் ஆளுநர் இனியாவது செயல்பட வேண்டும்.


கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்):  7.5. சதவீத இடஒதுக்கீட்டு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது தமிழக மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற் றியாகும். பிற்படுத்தப்பட்டோருக் கான 50 சதவீத இடஒதுக்கீட்டினை பெற்றுத்தருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்,


இரா.முத்தரசன் (இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநில செயலாளர்):  மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறை யில் மாநில அமைச்சரவையும், சட்டமன்றப் பேரவையும் கூடுதல் அதிகாரம் உள்ளது என்பதை ஏற்கத் தவறிய ஆளுநர் 7.5 இட ஒதுக்கீட்டு சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் தராமல் காலதாமதப்படுத்தியது அர்த்தமற்ற செயலாகும்.


தொல்.திருமாவளவன் (விசிக தலைவர்): 7.5 சதவீத இடஒதுக்கீட் டிற்கு ஆளுநர் காலம் தாழ்த்தி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ஒப் புதல் பயனற்ற ஒப்புதல். இதன்மூலம் ஆளுநர் சமூக நீதிக்கு எதிரானவர் அல்லது மத்திய அரசு சமூக நீதிக்கு எதிரானது என்பது அம்பலமாகியிருக்கிறது.


இராமதாஸ்  (பாமக நிறுவனர்): 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்த  சட்ட ஆலோசனை நடத்த வேண்டும் என்று ஆளுநர் நினைத்திருந்தால், அதை ஒரு சில நாட்களில் நடத்தி முடித்திருக்கலாம்.  7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் கிடைத்து விட்ட நிலையில், மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடைமுறைகளை உடனடியாக தொடங்க அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும்.


விஜயகாந்த் (தேமுதிக தலைவர்): 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு தொடர் பான அரசாணை பிறப்பித்த அரசாங் கத்துக்கும், அதற்கு ஒப்புதல் அளித்த ஆளுநருக்கும் வாழ்த்துகளையும், வர வேற்புகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): 7.5  சதவீதம் உள் ஒதுக்கீடு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதற்கு நன்றி. பெற் றோர்கள், மாணவர்களுடைய எதிர் பார்ப்பும், எண்ணங்களும் நிறைவேற வேண்டும் என்று தொடர்ந்து வலி யுறித்திய கோரிக்கை நிறைவேற்றுப் பட்டு இருக்கிறது.


Comments