திருச்சி அருகே பெரியார் சிலை அவமதிப்பு - தலைவர்கள் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 28, 2020

திருச்சி அருகே பெரியார் சிலை அவமதிப்பு - தலைவர்கள் கண்டனம்

சென்னை, செப். 28- பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதற்குப் பல்வேறு அரசியல் கட் சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையையொட்டி இந்தச் சமத்துவபுரத்தின் நுழைவு வாயிலில் பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், பெரியார் சிலைக்கு சமூக விரோதிகள் காவிச் சாயம் பூசி, காலணி மாலை அணிவித்திருப்பது நேற்று (செப். 27) காலை தெரியவந்தது. இதனால், பதற்றமான சூழல் நிலவியது. தகவலறிந்து இனாம்குளத்தூர் மணி கண்டம் காவல் துறையினர் விரைந்து வந்து காலணி மாலையை அகற்றியதுடன், காவிச் சாயத்தைத் துடைத்து, சிலையைத் தூய்மைப் படுத்தினர். இது தொடர்பாக, காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தளபதி மு.க.ஸ்டாலின்



திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் நேற்று (27.9.2020) பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு: ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் மேலும் மேலும் மக்களிடம் இருந்து புறக்கணிக்கப்படுவோம் என்பதை இவர்கள் எப்போது புரிந்து கொள் ளப் போகிறார்கள்?


திருச்சி - இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்!


பெரியார் ஒரு இயக்கத்தின் தலைவர் அல்ல; தமிழ் இனத்தின் தலைவர். அவரை அவம திப்பதாக நினைத்து அச்செயல் செய்பவர்கள் தங்களைத் தாங்களே அவமரியாதை செய்து கொள்கிறார்கள்!


இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


சமூக விரோதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை: ஓபிஎஸ் உறுதி



பெரியார் சிலையை அவ மதித்தவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


துணை முதல்வர் ஓ.பன் னீர்செல்வம் தன் ட்விட்டர் பக்கத்தில், “சமூகநீதிக்காக பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் சிலையை திருச்சியில் மர்மநபர்கள் அவமரி யாதை செய்திருக்கும் செயலுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இக்குற்றச் செயலில் ஈடுபட்ட சமுக விரோதிகள் மீது மாண்புமிகு அம்மாவின் அரசு சட்டப்படி கடும்நடவடிக்கை எடுக்கும்’’ இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


வைகோ, பொதுச்செயலாளர், மதிமுக



திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில் 2000 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில், பெரியார் நினைவு சமத்துவபுரம் உருவாக்கப்பட்டது. அந்த சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு நேற்று இரவு யாரோ மர்ம மனிதர்கள் காவிச் சாயம் பூசி, காலணி மாலை அணிவித்துள்ளனர்.


மத்தியில் பாஜக ஆட்சி நடக்கிறது. மாநிலத் திலும் அவர்களுக்கு அனுசரணையான ஆட்சி இருக்கிறது என்கிற துணிச்சலில் தமிழகத்தில் அண்மைக் காலமாக சில தைரியமில்லாத பேர் வழிகள் இந்த அக்கிரமச் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.


கருத்துக்குக் கருத்து, விவாதத்துக்கு விவாதம் என்பதில் நம்பிக்கையில்லாத இந்தச் சமூக விரோதிகளை இனம் கண்டு காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும், நாட்டுக்கு உழைத்திட்ட தலைவர்களின் சிலை களை அவமதிப்பவர்களைக் கைது செய்து, கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும்.


இனாம்குளத்தூரில் உள்ள பெரியார் சிலைக்கு காவிச் சாயம் பூசி, காலணி மாலை அணிவித்து இருப்பதன் மூலம் தமிழகத்தில் இந்துத்துவா சக்திகள் காலூன்றி விட முடி யாது. மாறாக, மக்கள் மத்தியில் எதிர்வினை யாற்றும் என்பதை மறந்து விடாதீர்கள்.


பெரியார் தத்துவங்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகள் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும். இதுபோன்ற அருவருக்கத்தக்க நடவடிக்கை களின் மூலம் பெரியாரையோ, திராவிட இயக் கக் கட்டமைப்பையோ சிதைத்துவிட முடியாது என்பதை இன எதிரிகளுக்கு எச்சரிக்க விரும்புகி றேன்.


இராமதாஸ், நிறுவனர், பாமக



திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரம் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பெரியாரின் சிலை மீது காவிச் சாயம் பூசியும், காலணி மாலை அணிவித்தும் அவமரியாதை செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. கோழைத்தனமான இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது ஆகும்.


அண்மைக்காலமாகவே கொள்கை அடிப் படையில் எதிர்கொள்ள முடியாத தலைவர்கள் மீது காவிச் சாயம் பூசியும், காலணி மாலை அணிவித்தும், சிலையின் பாகங்களைச் சேதப் படுத்தியும் அவமதிப்பது அதிகரித்து வருகிறது. உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற் றிய திருவள்ளுவர் சிலை கூட இதற்குத் தப்ப வில்லை. சிலர் இத்தகைய செயல்களைச் செய்து அதன் மூலம் தங்களின் முகத்தில் தாங்களே கருப்பு சாயத்தைப் பூசிக் கொள்வதை வாடிக்கை யாக வைத்துக் கொண்டிருக்கின்றனர்.


கொள்கையைக் கொள்கையால் எதிர் கொள்ள முடியாத கோழைகளும், மக்களின் ஆதரவைப் பெற முடியாதவர்களும்தான் இத்தகைய இழிசெயல்களில் ஈடுபடுவார்கள். அவர்களைத் தப்பவிடக் கூடாது.


அண்மையில் கோவையில் பெரியாரின் சிலையை அவமதித்தவர்கள் மீதும், இந்து மதம் குறித்து தவறாகப் பேசியவர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. அதற்குப் பிறகும் இத்தகைய செயல்களில் ஈடுபட சில மிருகங்கள் துணிகின்றன என்றால், அவர்களின் பின்னணி யில் மிகப்பெரிய சக்திகள் இருக்கின்றன என்று தான் அர்த்தம்.


தமிழ்நாட்டில் அமைதியைக் குலைத்து, நல்லிணக்கத்தைச் சிதைத்து அரசியல் லாபம் தேடும் சக்திகள்தான் இத்தகைய செயல்களை ஊக்குவிக்கக்கூடும். இத்தகைய செயல்களை இனியும் அரசு அனுமதிக்கக் கூடாது.


சிலைகளை அவமதிப்பவர்களை விட, அவ்வாறு செய்யும்படி மற்றவர்களைத் தூண்டு பவர்கள்தான் மிகவும் கொடியவர்கள்; ஆபத் தானவர்கள். அவர்கள் மீது தேசியப் பாது காப்புச் சட்டம் உள்ளிட்ட அனைத்துச் சட் டங்களின்படியும் மிகக் கடுமையான நட வடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.


தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டாக தலை வர்களின் சிலைகளை அவமதிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க உளவுத்துறை இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.


இனாம்குளத்தூர் சமத்துவபுரம் வளாகத் தில் பெரியாரின் உருவச் சிலையை அவமதித் தவர்களைக் கைது செய்து மிகக் கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். அது தமிழகத்தில் அமைதியையும், நல்லிணக் கத்தையும் சிதைக்க முயல்வோருக்கு மறக்க முடியாத பாடமாக அமைய வேண்டும்.


தொல்.திருமாவளவன்



விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவள வன் தமது சுட்டுரைப்பதி வில் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,


புரட்சியாளர் அம்பேத்கர்சிலையை அவமதிக்கும் ஜாதி வெறியர்களே இன்று இனவெறியர்களாக மதவெறியர்களாக மாறி யுள்ளனர். அதற்கான சான்றுதான் பெரியார் சிலை அவமதிப்பு. அதனை வேடிக்கைப் பார்ப்பதைப் போலவே இதனையும் வேடிக்கை பார்ப்பது ஆளுவோரின் இயலாமையே ஆகும்.விசிக வன்மையாகக் கண்டிக்கிறது.


கே.எஸ்.அழகிரி, தலைவர்,


தமிழக காங்கிரஸ்



திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர், சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலை மீது காவி வர்ணம் பூசி வகுப்புவாத சக்திகள் வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தியுள்ளனர். இத்தகைய அவமதிப்புகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின் றன. இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்?


தமிழ்ச் சமுதாயத்திற்கு பகுத்தறிவு, சுயமரி யாதை, சமூக நீதியைப் பெற்றுத்தந்த தந்தை பெரியார் சிலையைக் களங்கப்படுத்துகிற வகை யில் செயல்படுபவர்கள் எவராக இருந்தாலும், அவர்களைத் தமிழக அரசு உடனடியாக கைது செய்யவேண்டும். அதைச் செய்ய தமிழக அரசு தவறுமேயானால் கடும் விளைவுகளைச் சந்திக்கவேண்டி வரும் என எச்சரிக்கிறேன்.


கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர்,


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி



திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியில் வைக்கப் பட்டுள்ள பெரியார் சிலையை இழிவுபடுத்தும் நோக்கோடு நேற்று (27.9.2020) நள்ளிரவு சமூக விரோதிகள் காவிச் சாயம் பூசி, காலணி மாலை அணிவித்துள்ளனர். சமூக விரோதக் கும்பல் களின் இச்செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.


தமிழகத்தின் பல பகுதிகளில் திருவள்ளுவர், அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்குக் காவிச் சாயம் பூசுவது, சேதப் படுத்துவது, இழிவுபடுத் துவது போன்ற செயல் களில் மதவெறி சக்திகள் தங்களது அரசியல் லாபத்திற்காக அவர்களது தலைவர்களின் ஆசியுடன் செய்து வருகின்றனர். இதன் மூலம் தமிழகத்தில் காலூன்ற முடியும் என்ற அவர்களின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது என்பதைச் சுட்டிக்காட்ட விரும் புகிறோம். பெரியார் சிலையை அவமதிக்கும் வகையில் இழிவுபடுத்திய சமூக விரோதிகளை உடனடி யாக கைது செய்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிட வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழக அர சையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.


டிடிவி தினகரன்,


பொதுச் செயலாளர், அமமுக


திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் பெரியார் சிலை காவி வண்ணம் பூசி அவமதிக் கப்பட்டிருப்பது கடுமையான கண்டனத்திற் குரியது. மறைந்த தலைவர்களின் சிலைகளை இப்படித் தொடர்ந்து அவமரியாதை செய்வதை ஏற்க முடியாது. சமூக அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் இத்தகைய செயல்களில் ஈடு படுபவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.


ஜி.கே.வாசன், தலைவர்,


தமிழ் மாநில காங்கிரஸ்


திருச்சியில் பெரியார் சிலைக்கு அவமரி யாதை ஏற்படுத்தியவர்கள் கண்டனத்துக்குரிய வர்கள் மட்டுமல்ல தண்டனைக்குரியவர்கள். மேலும், மறைந்த தலைவர்கள் சிலைக்கு அவ மதிப்பு செய்பவர்களின் தவறான செயல்பாடு ஒருபோதும் ஏற்புடையதல்ல. இந்தச் செயல் இனிமேலும் தொடரக் கூடாது.


தி,மு,க, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு



திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் இனாம் குளத்தூர் பெரியார் சமத்துவபுரத்தில் நிறுவப் பட்டுள்ள பெரியாரின் மார் பளவு சிலைக்கு நேற்று விஷ மிகள் சிலர் செருப்பு மாலை அணிந்து காவிச் சாயம் பூசி அவ மரியாதை செய்தனர். இதற்கு பல் வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் கம்யூனிஸ்ட், திமுக, உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக முதன் மைச் செயலாளர் கே.என்.நேரு சம்பவ இடத் திற்கு வந்து பெரியார் சிலைக்கு மாலை அணி வித்து பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் தமிழகத்தில் விரை வில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் திமுக வெற்றி பெற்று விடுமோ? என்ற அச்சத்தில்,


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரியார் சிலையை அவமதிப்பு செய்கிறார்கள். பெரியாரை சிறுமைப்படுத்துவதாக எண் ணிக் கொண்டு அவர்கள் செய்யும் காரியங்களால் எங்களுக்கு தான் பலமே தவிர இச்செயலால் அவர்கள் சிறுமைப்படுகிறார்கள் என்பதை அவர்கள் உணரவில்லை. திமுக விற்கோ அல்லது தோழமைக் கட்சி களுக்கோ எவ்வித சிறுமையும் இல்லை. எதிர் தரப்பினரின் இதுபோன்ற செயல் களால் நாங்கள் வெற்றி வாய்ப்பைப் பெறுவோம் என்பதை உறுதியாக கூற முடியும்.


ஸ்டாலின் தான் முதல்வராக வருவார் இது உறுதி. இன்றைக்கு பெரியார் சிலை அவமதிப்பு செய்பவர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் முதல்வரான பிறகு இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடமுடியுமா? பெரியார் சிலைக்கு காவி பூசும் அவர்கள் பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்டால் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.


இதுபோன்று சிலைக்கு அவமரியாதை செய் பவர்கள்மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் இதுபோன்ற செயலில் ஈடுபடு பவர்கள், இவர்கள்மீது நடவடிக்கை எடுத்து விடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவே பெயரளவிற்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்கிறார்கள். இவ்வாறு கே.என். நேரு கூறினார்.


இவ்வாறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment