சென்னை, செப்.29 சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று (28.9.2020) நீதிபதிகள் M.M.சுந்தரேஷ் - ஹேமலதா அமர்வு முன்னிலையில் முதலமைச்சர் தலைமையில் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்பட வேண்டிய தாழ்த்தப் பட்டோர் (ம) பழங்குடியினர் சட்ட விதி 16 (2)ன் படியான மாநில உயர்நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண் டும் என்ற வழக்கு (W.P. 10335/2020) இன்று இறுதி விசா ரணைக்கு வந்தது. மனுதாரர் கோவை வழக்குரைஞர் பன்னீர்செல்வம் சார்பில் வழக் குரைஞர் சு.குமாரதேவன் ஆஜ ரானார்.
அரசு தரப்பில் கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் P.Hஅரவிந்த பாண்டியன் ஆஜரானார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் சு.குமாரதேவன் கடந்த 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு மாநில உயர்நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடத்தப் படவில்லை என்று சுட்டிக்காட்டினார். இதை ஒப்புக் கொண்ட கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் நிர்வாகக் காரணங்களுக்காக 2013 ஆண்டுக்குப் பிறகு இந்த வருடம் வரை கூட்டம் நடத்தவில்லை என்றும் எதிர் வரும் காலங்களில் அரசு தாழ்த்தப் பட்டோர் (ம) பழங்குடியினர் சட்ட விதி 16 (2)ன் படி ஆண்டுக்கு இரு முறை மேற்படி கூட்டத்தினை நடத்த உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் கடந்த 08.09.2020 அன்று தமிழக முதலமைச்சர் தலைமையில் மாநில உயர்நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடந்தது என்றும் அதில் பத்து அம் சங்கள் விவாதிக்கப்பட்டது என்றும் இது சம்பந்தமாக தனது பதில் மனு மற்றும் அறிக்கையினை நீதிமன்றத் தில் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தாழ்த்தப் பட்டோர் (ம) பழங்குடியினர் சட்ட விதி 16 (2)ன் படி கண்டிப்பாக எதிர் வரும் காலங்களில் ஒவ்வொரு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மாநில உயர்நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடத்தப் பட வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பின் படி தாழ்த்தப் பட்டோர் (ம) பழங்குடியினர் சட்ட விதி 16 (2)ன் அடிப்படையில் ஆண்டுக்கு இரு முறை தமிழக அரசு மாநில உயர்நிலை விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தினை தவறாது நடத்திட வேண்டும்.
No comments:
Post a Comment