தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5.86 லட்சமாக உயர்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 29, 2020

தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5.86 லட்சமாக உயர்வு

சென்னை,செப்.29, தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுப வர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சுகா தாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,589 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 5,86,397 ஆக அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் இன்று 70 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கரோ னாவால் உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 9,383 ஆக அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் இன்று 5,554 பேர் கரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழ கத்தில் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5.30 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழ கத்தில் தற்போது 46,306 பேர் கரோ னாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று ஒருநாளில் 1,283 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,306 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment