ஒற்றைப் பத்தி - கலைவாணர்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 30, 2020

ஒற்றைப் பத்தி - கலைவாணர்!


கலைவாணரின் நகைச்சுவை மென் மையானது. ‘யாரை நோக்கி விமர்சனம் வைக்கிறோமோ, அவர்களைப் புண் படுத்திவிடக்கூடாது, அவர்களும் இந்த சீர்திருத்தக் கருத்துகளை ஏற்றுக்கொள் ளும் வகையில் இருக்கவேண்டும்' என்ப தாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ண னின் நகைச்சுவைக் காட்சிகள் அமைந் தன.


‘தீண்டாமை ஒழிப்பு' என்பதில் அவரது அக்கறை குறிப்பிடத்தக்க ஒன்று. ‘கிந்தனார்' நாடகம், காலந்தோறும் தொட ரும் ஜாதிய மனநிலை குறித்துப் பேசியது. நவீன வாழ்க்கை ஜாதியத்தில் ஏற்படுத்திய குறுக்கீடுகளை அவர் வரவேற்றார்.


‘கரகரவென சக்கரம் சுழல


கரும்புகையோடு வருகிற ரயிலே


கனதனவான்களை ஏற்றிடும் ரயிலே


ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே ரயிலே


மறவரோடு பள்ளுப் பறையரை ஏற்றி மதபேதத்தை ஒழித்திட்ட ரயிலே'


என்று நவீன கண்டுபிடிப்பு, பழை மைவாத ஜாதியத்தின் பிடியைச் சற்றே தளர வைத்ததைச் சுட்டிக்காட்டினார்.


‘அறிவியல் மனப்பான்மையே மூட நம்பிக்கையைச் சாய்க்கும்; ஜாதிய மனநிலையை முற்றிலுமாகத் தகர்க்கும்' என்ற பெரியாரின் நிலைப்பாட்டைக் கலைவாணர் பிரதிபலித்தார்.


நவீன மனநிலை கொண்டவர் களுக்கு முன்னேற்றம் குறித்த கனவு களும் எதிர்காலம் குறித்த தொலை நோக்குப் பார்வையும் இருக்கும். ‘இனி வரும் உலகம்' நூலில் பெரியார் எதிர் காலத்தில் டெஸ்ட் டியூப் பேபி முதல் செல்போன் வரை உருவாகும் சாத்தியம் குறித்து எழுதியிருப்பார். இன்று படித் தாலும் ஆச்சரியமூட்டும் நூல் அது. அத் தகைய தொலைநோக்குப் பார்வையும் விருப்பத்துடன் கூடிய கனவும் கலை வாணர் என்.எஸ்.கிருஷ்ணனிடமும் இருந்தது.


‘பொஞ்சாதி, புருசன் இல்லாம புள்ள குட்டி பிறக்குறாப்புல விஞ்ஞானத்தை வளர்க்கப்போறேண்டி' என்று ‘விஞ்ஞானத்தை வளர்க்கப்போறேண்டி' பாட லில் எதிர்காலம் குறித்த பல கனவுகளை கலைவாணரும், மதுரமும் அடுக்கு வார்கள்.


பொதுவாகவே ‘அந்தக் காலம்போல் இந்தக் காலம் இல்லை. எங்கள் காலத்தில் எல்லாம் நன்றாக இருந்தது' என்று பேசிப் புலம்புவது, மாற்றத்தைச் சகிக்காத பழைமைவாதிகளின் பழக்கம். ஆனால் கலைவாணரோ கடந்தகாலம் எந்தள வுக்கு ஒடுக்குமுறையும், அடக்குமுறையும் கொண்டதாக இருந்தது என்பதையும் சமகாலத்தில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தபோதும் எதிர்த்துக் குரல் கொடுப் பதற்கான சூழல் உருவானதன் பின்ன ணியையும் உணர்ந்து ஆதரித்தவர்.


‘மனுசனை மனுசன் ஏச்சுப் பிழைச்சது அந்தக் காலம் - மடமை நீங் கிப் பொது உடைமை கோருவது இந்தக் காலம்' என்ற பாடலில் ஜனநாயகம், பகுத் தறிவு, பொதுவுடைமை, பெண்ணியம் என்று நவீன காலக் கருத்தாக்கங்களின் வருகையை முன்வைத்துக் கொண்டாடு வார். ‘திரௌபதை தன்னைத் துகிலுரிஞ்சது அந்தக் காலம்' என்று கலைவாணர் பாட, ‘பெண்ணைத் தொட்டுப் பார்த்தா சுட்டுப்புடுவான் இந்தக் காலம்' என்று மதுரம் பாடலைத் தொடர்வது, முற்போக் கின் அடையாளம்.


பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற திராவிட இயக்கத் தலைவர்க ளோடு நட்பும் பரிவும் கொண்ட என்.எஸ்.கிருஷ்ணன் தனது படங்களில் அவர்களது கருத்துகளைப் பரப்பவும் செய்தார்.  அப்போது திராவிட இயக்கக் கருத்துகளைத் திரைப்படங்களில் பரப்பு வதற்குக் கடும் நெருக்கடி இருந்தது. கலைஞரின் ‘திரும்பிப் பார்' படத்தில் ‘கோபுரத்தில் ஏறி..' என்று தொடங்கும் வசனம், ராமானுஜரைக் கிண்டலடிப்ப தாகக் கூறி அன்றைய தணிக்கைத் துறையால் படத்திலிருந்து நீக்கப்பட்டது. இப்படி அபத்தமான தணிக்கை நடை முறை நிலவிவந்த சூழலிலும்,


‘தீனா மூனா கானா' என்று தி.மு.க. வைப் புகழ்வதைப் போலப் பாடி, ‘திருக் குறள் முன்னணிக் கழகம்' என்று பெயரை மாற்றிக் குறிப்பிட்டுப் பாடினார் கலை வாணர் என்.எஸ்.கிருஷ்ணன். பெரியார், கருப்பு - சிவப்பு, அண்ணா எனப் பல அடையாளங்களை அந்தப் பாடலில் கொண்டு வந்திருப்பார் கலைவாணர்.  சிரிப்பின் வித்தியாசங்களைச் சொல்லும் ‘சிரிப்பு' பாடலில் அவரது உடல்மொழி குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. சங்கீதச் சிரிப்பை அவர் நிகழ்த்திக் காட்டுவதுதான், எத்தனை அழகு!


எனது குருநாதர் யார் தெரியுமா?


தந்தை பெரியாரின் ‘குடிஅரசு' தான் என்று சொன்னவர் கலைவாணர்.


இன்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள் (1957).


 - மயிலாடன்


No comments:

Post a Comment