ஜி.எஸ்.டி. இழப்பீடு: ஆசிரியரின் கருத்தையொட்டிய  கேரள அரசின் கருத்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 30, 2020

ஜி.எஸ்.டி. இழப்பீடு: ஆசிரியரின் கருத்தையொட்டிய  கேரள அரசின் கருத்து!

திருவனந்தபுரம், ஆக. 30 சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலின் 41 ஆவது கூட்டத்தில், மாநிலங்களின் இழப்பீடு பற்றாக்குறையான ரூ.2.35 லட்சம் கோடியைத் தீர்க்க இரண்டு வாய்ப் புகளை மத்திய நிதி அமைச்சர் கூறியுள்ளார்.


நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘இது கடவுளின் செயல்’ என்று கரோனா தொற்று நோயை பற்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  குறிப்பிட்டார்.


“முதல் அறிவுறுத்தலின்படி, மாநிலங்கள் தங் களுக்கு வரவேண்டிய இழப்பீட்டுத் தொகைக்கு ஈடாக தங்கள் மாநிலத்தின் எதிர்கால வரவுகளை அடகு வைத்து கடன் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது”,


“இரண்டாவது வாய்ப்பின்படி, மாநிலங்கள் மத்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இதற்கும் வெளிச்சந்தை யில் கடன் வாங்குவதற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.”


இந்த இரண்டு ஆலோசனைகள்மூலம் நிதிச் சுமை முழுவதும் மாநிலத்தின் மீது தான் விழுகிறது,


 இது தொடர்பாக  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேற்று  விடுத்துள்ள அறிக் கையின் மூலம், இதனால் ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் கேரள அரசும் ஆசிரியரின் கருத்தையொட்டி, மத்திய நிதி அமைச்சரின் உரைக்கு எதிர்வினையாற்றி யுள்ளது.


கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும்  நிதியமைச்சர் டி.எம்.தோமஸ் இசாக்  ஊடகவிய லாளர்களிடம் உரையாற்றும்போது,  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட இரண்டு வாய்ப்புகளில், முதலாவது மாநில அரசு கள் தங்களின் தேவைக்கு ஏற்ப மத்திய ரிசர்வ் வங்கியிடம்   கடன் வாங்க வேண்டும்.


இரண்டாவது கரோனா தொற்றின் காரணமாக, ஏற்பட்ட பெரும் நிதி நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு சுமார் ரூ.3 லட்சம் கோடி ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்படும்;  மாநில அரசுகளுக்கு ஒரு கோடி ரூபாய் வருவாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை மத்திய அரசு ஒப்புகொண்டுள்ளது.  இதற்காக மாநில அரசுகள்  தங்களுக்கு வரவேண்டிய இழப்பீட்டுத் தொகைக்கு ஈடாக தங்கள் மாநிலத்தின் எதிர்கால வரவுகளை அடகு வைத்து கடன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இரண்டுமே நடைமுறைக்குச் சாத்திய மில்லாத ஒன்று ஆகும். மத்திய அரசு தொடக்கத்தில் இருந்தே மாநில அரசுகளிடம் ஆலோசனைகளைப் பெறாமல் பொருளாதார வல்லுநர்களின் எச்சரிக்கையும் மீறி எடுத்த அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் தோல்வியில் முடிந்தது மட்டுமல்லாமல், நாட்டை யும் பெரும் பொருளாதாரச் சரிவிற்கு கொண்டு சென்றுவிட்டது.  மாநில அரசுகளின் உரிமை களைப் பறித்து தற்போது அனைத்திற்கும் மத்திய அரசிடம் கையேந்தி நிற்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள். இப்போது மாநில எதிர்கால வருவாயை அடகுவைக்கவும், கடன் வாங்கவும் நிர்பந்திக்கின்றனர்.


 மத்திய நிதி அமைச்சரின் இந்த கருத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அவர் மாநில அரசுகளின் கருத்தை செவிகொடுத்து கேட்கக்கூட தயாராக இல்லை.  மாநில அரசு களின் உரிமை மீறல் தொடர்பான விவாகாரத்தில் உரிமைகளை மீட்க கேரள அரசு எப்போது தயாராக இருக்கும் என்று கூறினார்.


No comments:

Post a Comment