புதிய ஈடேற்றல் மய்யங்கள் உருவாக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 30, 2020

 புதிய ஈடேற்றல் மய்யங்கள் உருவாக்கம்

கோயம்புத்தூர்,  ஜூலை 30- 10 நுகர்வோர்களுக்கு உதவும் வகை யில் புதிய ஃபுல்ஃபில் மெண்ட் சென்டர்கள் மற்றும் 7 நடப்பு கட்ட டங்கள் விரிவாக்கத்துடன், தனது இந்திய ஈடேற்றல் வலையமைப் பினை விரிவாக்கம் செய்துள்ளதை அமேசான் இந்தியா  அறிவித்துள்ளது. இந்த விரிவாக்கத்துடன், தற்போது 15 மாநிலங்களில்,32 மில்லியன் கியூபிக் அடிகளுக்கும் மேற்பட்ட மொத்த சேமிப்புக் கொள்ளளவை அமேசான் இந்தியா கொண்டுள்ளது.  60-க்கும் மேற்பட்ட ஈடேற்றல் மய்யங்களைக் கொண்டிருக்கும். புதிய, பெரிய அளவிலான வீட்டுப்பயன்பாட்டுச் சாதனங்கள்,  மரச்சாமான் கள் வகையினத்திற்கான  வலையமைப்பும், பெறுதல் மய் யங்களும் உட்பட்டுள்ளன.  ஈடேற்றல் வலையமைப்பானது 8 மில்லி யன் சதுர அடிகளுக்கும் மேற்பட்ட பரப்பளவை  அதாவது, 100 கால்பந்து மைதானங்கள் அளவிற்கு, பல மில்லியன் பொருட்களைச் சேமிக்கும் வகையில் பரந்து விரிந்து அமைந்துள்ளது என துணைத் தலைவர் அகில் சக்சேனா  தெரிவித்துள்ளார்.


வீட்டிலிருந்து பணிபுரிய மடிக்கணினி அறிமுகம்


கோயம்புத்தூர், ஜூலை 30- இந்தியாவில் டெல் டெக்னாலஜிஸ் மற்றும் ஏலியன்வேர் இன்று ஏலியன்வேர் 15 3, டெல் 5 15 , டெல் 5 15, மற்றும் டெல் 3 15 ஆகியவற்றுடன் பிசி கேமிங்கில் சமீபத்திய வற்றை அறிமுகம் செய்துள்ளன. இந்தியாவில்  டெல் ஜி சீரிஸ் இடைநிலை முதல் கேஷுவல் விளையாட்டாளர்கள் வரை பிரபல மடைந்து வருவதால், டெல் ஜி சீரிஸ் போர்ட்ஃ போலியோவுடன் வடிவமைப்பு, விளையாட்டு செயல்பாடு மற்றும் செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டு பயனர்களின் வீட்டிலிருந்து பணிபுரிய ஏற்றத் தக்க வகையில் அதன் கவனத்தை, பலப்படுத்தியுள்ளது.இந்த போர்ட்ஃபோலியோ கேமிங் பிசிக்களின் சக்திவாய்ந்த வரிசையை வழங்குகிறது. என  இந்நிறுவன துணைத் தலைவர் ராஜ் குமார் ரிஷி தெரிவித்துள்ளார்.


தமிழக அங்கன்வாடி


பணியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி


சென்னை, ஜூலை 30- பள்ளிக்கல்வி தொடர்பான முழுமையான ஆலோசனை சேவையில், சர்வதேச அளவில் பங்காற்றி வரும் எஜூஸ்பார்க் இன்டர்நேஷனல் நிறுவனம், தமிழக அரசுடன் கை கோர்த்துள்ளது. இதன்படி, தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தை கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கவனம் குன்றிய குழந்தைகளின் சிறப்புத் தேவைகளில் அவர்களுக்கு உதவவும், தேவையான திறன்களில் அவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் ஆலோசனை களைக் கொண்டதாக இந்தப் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.


253 அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்ற சிறப்புப் பயிற்சி முகாம், அண்மையில் நடத்தப்பட்டது. இந்தப் பயிற்சி முகாமில் சென்னை, செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர். இந்தத் திட்டத் தில் தொடர்புள்ள அரசு அலுவலர்களும் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment