ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 31, 2020

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:



  • மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, புதிய வடிவப் பிசாசு என தலைப்பிட்டு தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

  • டில்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹனிபாபு கைது செய்யப்பட்டது அரசின் அச்சுறுத்தல் போக்கைக் காட்டுகிறது என்று தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.


டெக்கான் கிரானிகல், சென்னைப் பதிப்பு:



  • தமிழ் நாட்டில் கரோனா காரணமாக முழு அடைப்பு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதி பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • புதிய கல்விக் கொள்கை, கல்வியின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என கல்வியாளர்கள் கருத்து.


இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி:



  • அயோத்தியில் ராமன் கோவில் பூமி பூஜைக்கு வரும் ஆகஸ்டு 5ஆம் தேதி பிரதமர் மோடி வர இருக்கும் நிலையில், அக்கோவிலின் அர்ச்சகர் மற்றும் காவலர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • கல்வியைத் தனியார்மயமாக்கும் முயற்சி என டில்லி துணை முதல்வர் சிசோடியா கருத்து.

  • அயோத்தியில், புத்த விகார் எழுப்ப வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.

  • புதிய கல்விக் கொள்கை குறித்து நெடிய விவாதம் மேற் கொள்ள வேண்டும் என ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் கும்கும் ராய் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

  • நாட்டின் பொருளாதார வீழ்ச்சி குறித்து மோடி அரசு மவுனம் காக்கிறது என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


தினகரன், சென்னை:



  • கல்லூரி இறுதியாண்டுத் தேர்வை ரத்து செய்ய முடியாது என யு.ஜி.சி. திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

  • புதிய கல்விக் கொள்கையால், ஏழை மக்களுக்குக் கல்வி எட்டாக் கனியாக மாறிடும் அபாயம் உள்ளது என தலையங்கத் தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • புதிய கல்விக் கொள்கை அமலாக்கம் குறித்து ஆகஸ்டு 3-ஆம் தேதி தமிழக முதல்வருடன் அமைச்சர், அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

  • புதிய கல்விக் கொள்கையை, அனைத்துக் கட்சித் தலை வர்களுடன் விவாதித்து முடிவு எடுக்கும்வரை நடைமுறைப் படுத்தக்கூடாது என தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், சென்னை:



  • உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக் கான சான்றிதழ் மத்திய அரசின் அறிவுறுத்தல்படியே வழங்கப் பட்டுள்ளது என்ற தமிழக அரசின் வாதத்தை ஏற்று, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.


எகனாமிக் டைம்ஸ்:



  • ஓ.பி.சி. பிரிவினருக்கு கிரிமிலேயர் குறித்த வருமான வரம்பில், சம்பள வருமானம் மற்றும் விவசாய வருமானம் சேர்க்கக்கூடாது. வருமான வரம்பை ரூ;15 லட்சமாக உயர்த்த வேண்டும் என ஓ.பி.சி. பிரிவினருக்கான நாடாளுமன்றக்குழு அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்துள்ளது.


- குடந்தை கருணா


31.7.2020


No comments:

Post a Comment