செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 30, 2020

செய்தித் துளிகள்....

* நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டில் மேலும் மூன்று பொறியியல் கல்லூரிகள்; தமிழ்நாட்டில் 2.63 லட்சம் மாணவர்களுக்கான சேர்க்கை பொறியியல் கல்லூரிகளில் நடைபெறும்.


* தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சுழற்சி முறை (ஷிப்டு) ரத்து - ஒரேமுறைதான் நடைபெறும் - கல்லூரி இயக்குநரகம் அறிவிப்பு.


* கரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின்போது - கடந்த 126 நாட்களில் ஊரடங்கை மீறிய 8 லட்சத்து 32 ஆயிரத்து 541 பேர்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


* கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்கக் கோரி அரசிடம் வியாபாரிகள் கோரிக்கை.


* வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பி.ஜே.பி.யோடு கூட்டணி அமைக்க அ.தி.மு.க. தயக்கம்!


* மாநகரப் பேருந்துகளில் ரூ.72 கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டம்.


* கேரள மாநிலக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க - தமிழக எல்லை தொடங்கும் இடத்தில் சோதனைச் சாவடி - உயர்நீதிமன்றம் உத்தரவு.


* டெல்டா பகுதி - மழையால் குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.


* 88 விழுக்காடு இந்தியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய விருப்பம்.


* காற்று மாசு அதிகரிப்பால் இந்தியரின் வாழ்நாள் 5 ஆண்டுகள் குறைவு.


* ஏசு, முகம்மது நபிகள், திப்பு சுல்தான் பாடங்கள் கருநாடகாவில் நீக்கம் - கடும் எதிர்ப்பு.


* கரோனாவால் புகைப் பிடிப்பவர்களுக்கு ஆபத்து!


* ஊரடங்கு: பள்ளிகள், கல்லூரிகளை ஆகஸ்டு 31 வரை திறக்க மத்திய அரசு அனுமதி மறுப்பு.


* சென்னை ஆளுநர் மாளிகை அதிகாரிகளுக்குக் கரோனா தொற்று - ஆளுநர் புரோகித் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.


* திரையரங்குகளைத் திறக்க மக்களிடம் வரவேற்பு இல்லை - கருத்துக் கணிப்பு.


 


No comments:

Post a Comment