கரோனா நோயாளிகளுக்கு  வசதி செய்து தரவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர்கள் மீது நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 29, 2020

கரோனா நோயாளிகளுக்கு  வசதி செய்து தரவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர்கள் மீது நடவடிக்கை

ஆந்திர முதல்வர் ஜெகன் உத்தரவு


ஹைதராபாத், ஜூலை 29  ஆந்திராவில் கரோனா நோயாளிகளுக்கு அரை மணி நேரத் தில் படுக்கை வசதி செய்து தரவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி எச்சரித்துள்ளார்.


 ஆந்திர மாநிலத்தில் நேற்று 7,948 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,10,297 ஆகி உள்ளது  இதில் நேற்று 58 பேர் உயிரிழந்து மொத்தம் 1148 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,064 பேர் குணமடைந்து மொத்தம் 52,622 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஆந்திராவில் கரோனா பரவலைத் தடுக்க அம்மாநில முதல்வர்  ஜெகன் மோகன் ரெட்டி பல அதிரடி திட்டங்களை முன் னெடுத்து வருகிறார்.


இருப்பினும் ஆந்திராவின் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இது குறித்து விளக்கம் கொடுத்த ஜெகன் மோகன் ரெட்டி, ஆட்சியர்கள், துணை ஆட்சியர்களே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மருத்துவமனையில் படுக்கை கிடைக்கவில்லை என்று எந்த கரோனா நோயாளியும் சொல்லக் கூடாது. அப்படி கூறினால், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் பொறுப்பேற்க வேண்டும். படுக்கை கிடைக்கவில்லை என்ற பேச்சே எழக்கூடாது. இது ஆந்திர அரசின் கவுரவ பிரச்சனையாகும்,'என்றார்.


No comments:

Post a Comment