வாடிக்கையாளர்களுக்கு நிதிச் சேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 29, 2020

வாடிக்கையாளர்களுக்கு நிதிச் சேவை

சென்னை, ஜூன் 29- இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் இணையதள தங்கக் கடன் நிறுவனமான ரூபீக் ஃபின்டெக், அதன் புதுமையான வழங்குதலான ரூபீக் இசட், பூஜ்ஜிய தொடர்பு தங்கக் கடன் கிஷோக் தொழில்நுட்பம், தற்போதைய கோவிட்-19 தொற்று நோயின் பின்னணியில் கடன் வழங்கலின் போது மனித தொடர்பை நீக்குவதன் மூலம் நிதிசேவைகளைப் பாதுகாப்பாக மேற்கொள்ள உதவ அறிமுகம் செய்துள்ளது.


 இந்தசேவை பெங்களூரு, சென்னை, அய்தராபாத் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் வழங்கப்படுகிறது என இதன் வழங்கு நர்களின் தலைவரான பிரசாத் ஷாஹானே கூறினார்.


நடுத்தர வருவாய் பிரிவினருக்கு


தனிநபர் கடன் வசதி!


சென்னை, ஜூன் 29- நவி என்ற பெயரில் இயங்கும் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு உடனடி தனிநபர் கடன் வழங்க உதவும், தனது மொபைல் அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது.


நடுத்தர வருவாய் பிரிவில் உள்ள இந்தியர்களில் ஸ்மார்ட்போன், மற்றும் மொபைல் தொழில்நுட்பம் பற்றி அறிந்து, அவற்றைப் பயன் படுத்தும் நபர்களுக்கு தனிநபர் கடன் வழங்க இது முன்வந்துள்ளது. இதற்காக, அந்த நபர் அச்சிடப்பட்ட காகித விண்ணப்பம் எதையும் நிரப்பி வழங்க வேண்டியதில்லை.


அதோடு, வேறு எந்த நேரடி தொடர்பும் இல்லாமல், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலமாகவே இந்தக் கடன் தொகை வழங்கப் படுகிறது. அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரையான இந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்த 36 மாத கால அவகாசம் தரப் படுகிறது என இந்நிறுவனத்தைச் சேர்ந்த சமித் ஷெட்டி தெரிவித்து உள்ளார். 


தமிழ் இலக்கியப் பாடலுக்கு


சிம்பொனி இசைக்கு வாழ்த்து


சென்னை, ஜூன் 29-  உலக அளவில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்கால நம்பிக்கை ஊட்டும் வகையில் பண்டைய தமிழ் இலக்கியப் பாடல்களுக்கு சிம்பொனி இசை அமைத்த சென்னையைச் சேர்ந்த இசை அமைப்பாளர் கணேஷ் பி.குமார் உருவாக்கியுள்ள  இசை ஆல்பம்  (26 ஜூன்) உலக அள வில் வெளியிடப்பட்டது. இதற்கு மத்திய நிதியமைச்சர் வாழ்த்துக் களைத் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவைச் சேர்ந்த பார்மா ரெக்கார்டிங்ஸ்  நிறுவனம் இந்த சிம்பொனி ஆடியோ இசை ஆல்பத்தை, தமது கிளாசிக்கல் இசைக்கான நவொனா ரெக்கார்டஸ்  என்ற லேபிளின் கீழ் வெளியிடுகிறது.  இசையால் உலக அமைதி மற்றும் ஒற்றுமையை நிலை நாட்டும் நோக்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பாக அவர் கள் இதனைக் கருதுகின்றனர்.


No comments:

Post a Comment