பேராசிரியர் ந.க. மங்கள முருகேசன் பங்கேற்று சிறப்புரை
தர்மபுரி, ஜூன் 29- தருமபுரி மண்டல திராவிடர் கழக கலந்துறவாடல் கூட் டம் 8.6.2020 அன்று மாலை 6.30 மணிக்கு காணொலி வழியாக நடை பெற்றது.
மண்டல திராவிடர் கழக செயலா ளர் கோ.திராவிடமணி வரவேற்புரை யாற்றினார். மண்டல திராவிடர் கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வம் தலைமை வகித்து உரையாற்றினார். திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.சி.எழிலரசன் தொடக்கவுரையாற்றினார்.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய் யத்தின் செயலாளர் பேராசிரியர் முனைவர் ந.க.மங்களமுருகேசன் பங்கேற்று விடுதலையின் விளைச்சல் என்ற தலைப்பில் உரையாற்றினார். தந்தை பெரியார், அன்னை மணியம் மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் பேருழைப்பால் விடா முயற்சியால், விடுதலை ஏடு சாதித் திருக்கும் காரியங்களை அளவிட முடியாது. ஒடுக்கப்பட்ட மக்களின் மூச்சுக் காற்றாக விடுதலை திகழ்கிறது. ஆட்சி அதிகாரத்தைப் பெற்றவர்கள், பட்டம் பதவி பெற்ற, மானஉரிமையை பெற்றவர்கள் யாவரும் விடுதலைக்கு நன்றிக் கடன்பட்டவர்கள் என தமது உரையில் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.செயராமன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில ப.க. துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாநில மகளி ரணிப் பொருளாளர் அகிலா எழில ரசன், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் எ.சிற்றரசு, திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் விஜி. இளங்கோ, மாவட்ட மகளிரணி தலைவர் ம. கவிதா, மாவட்ட துணைச் செயலா ளர் எம்.கே.எஸ்.இளங்கோவன், மாவட்ட மகளிரணிச் செயலாளர் சி.வெண்ணிலா, ஊற்றங்கரை பழ. பிரபு, மத்தூர் திருமாறன், ஒசூர் மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன், கிருட்டிணகிரி மாவட்டத் தலைவர் தா.அறிவரசன், மாவட்டச் செயலா ளர் க.மாணிக்கம், தருமபுரி நகரத் தலைவர் கரு.பாலன் ஆகியோர் கருத் துரை வழங்கினார்கள்.
ஒசூர் மாவட்ட திக. செயலாளர் மா.சின்னச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம், மாவட்ட மகளிரணிதலைவர் செல்வி செல்வம், பெரியார் பெருந்தொண்டர் சிவந்தி அருணாச்சலம், கிருட்டிணகிரி மாவட்ட அமைப்பாளர் தி.கதிரவன், எல்.அய்.சி.மனோகர், மண்டல இளைஞரணிச் செயலாளர் வ.ஆறு முகம், கிருட்டினகிரி நகர செயலாளர் தங்கராசன், தருமபுரி மாவட்ட ப.க. தலைவர் கதிர்.செந்தில், கி.இராம சாமி, இளையராஜா, தஞ்சை குண சேகரன், மண்டல மாணவர் கழக செயலாளர் செல்லத்துரை ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். நிறைவாக ஓசூர் மாவட்ட மகளிரணி அமைப் பாளர் கண்மணி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியை மாநில திராவிட மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் நெறிப்படுத் தினார்.
No comments:
Post a Comment