தொழிலாளர்கள்-விவசாயிகளைக் காக்க பெரியாரின் ஈரோடு திட்டம் தேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 19, 2020

தொழிலாளர்கள்-விவசாயிகளைக் காக்க பெரியாரின் ஈரோடு திட்டம் தேவை

கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி பேச்சு



தஞ்சாவூர், மே 19 தஞ்சாவூர் மண்டல திராவிடர் கழக இளைஞரணி சார்பில், மே 1 ஆம் தேதி உலகத் தொழிலாளர் நாள் மற்றும் புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழா சிறப்பு காணொலி கருத்தரங்கம் காலை 11 முதல் 1 மணி வரை நடைபெற்றது.


கூட்டத்தில், தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல் வரவேற்று உரையாற் றினார். மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார் தலைமையேற்று உரையாற்றி னார். திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சி.அமர் சிங், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி ஆகி யோர் முன்னிலை வகித்து உரை நிகழ்த்தினர். மாநில பகுத்தறி வாளர் கழக துணைத் தலைவர் கோபு.பழனிவேல் புரட்சிக் கவிஞர் பாடல்களை பாடினார்.


நிகழ்ச்சியில், கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் கருத்துரையாற்றினார். மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் தொடக்கவுரையாற்றினார். மாநில பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி சிறப்புரையாற்றினார்.


கரோனா ஊரடங்கால் உலகமே முடங்கியிருக் கக் கூடிய நிலையில், இணைய ஊடகத் தொடர்பு வாயிலாக புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் மற்றும் மே தின விழாவை சிறப்பாக நடத்திக்கொண்டிருக் கிறோம். ஆசிரியர் அவர்களின் சீரிய வழிகாட் டுதலில் நடப்பது சிறப்புக்குரியதாகும்.


பொதுவாக திராவிடர் இயக்க மேடைகளில் பெரியாரின் கொள்கைகளான ஜாதி மறுப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, கடவுள் மறுப்பு, சுயமரி யாதை, சமத்துவம் இவற்றைப் பேசுவோம். இவற் றுக்கு இணையாக, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தனது கவிதைகள் மூலமாக எளிய மக்களிடம் கொண்டு சேர்த்தார்.


மேதினத்தில் கரோனா காரணமாக தொழிலா ளர் நிலை மிகவும் வேதனைக்குரியதாக இருக்கிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமையை நினைத்துப் பார்க்கும்போது நமது நெஞ்சம் நொறுங் கிக் கொண்டிருக்கிறது. பசியால் அவர்கள் வாடி வாழ்விழக்கும் நிலையில் உள்ளனர்.


இந்நிலையில் அரசு ஏழை, எளிய கூலித் தொழி லாளிகள் வாங்கியக் கடனை மூன்று மாதங்களுக்கு பிறகு கட்ட வேண்டுமென்கிறது. ஆனால், பெரு முதலாளிகள் வாங்கியக் கடனை வாராக்கடன் என்றுகூறி 70 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய் கிறது. அரசின் தரம் தாழ்ந்த இந்த கொள்கையால் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.


ஏழை, எளிய மக்களிடமிருந்து பணத்தை சுரண்டி, பணக்கார பாசிஸ்டுகளுக்கு அரசு பிரித்துக்கொடுப்பது கண்டிக்கத்தக்கது. இத்தகைய நிலையில் தந்தை பெரியார் அவர்கள் 1930 ஆம் ஆண்டு கொண்டுவந்த  ஈரோடு வேலைத்திட்டத்தை நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.


அதாவது, தேசத்தின் பேரால் கொடுக்க வேண் டிய எல்லா கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். எல்லா தொழிற்சாலைகளையும், ரயில்வேக்களை யும், பாங்கிகளையும், கப்பல் படகு நீர் வழி போக்குவரத்து சாதனங்களையும் பொதுமக்களுக்கு உரிமையாக்குவது, எந்தவிதமான பிரதிப்பிரயோ ஜனமும் கொடுக்கப்படாமல் தேசத்தில் உள்ள எல்லா விவசாய நிலங்களையும், காடுகளையும் மற்ற ஸ்தாவர சொத்துக்களையும் பொது ஜனங் களுக்கு உரிமையாக்குவது.


குடியானவர்களும், தொழிலாளர்களும், லேவா தேவிக்காரர்களிடம் பட்டிருக்கும் கடன்களையெல் லாம் செல்லுபடியற்றதாக்கிவிடுவது. அடிமை ஒப்பந்தங்களை ரத்து செய்து விடுவது. சுதேச சமஸ்தானங்கள் என்பவைகளை எல்லாம் மாற்றி இந்தியா முழுவதையும் தொழிலாளிகள் குடியா னவர்கள், சரீர வேலைக்காரர்கள் என்பவர்களு டைய நேரடியான ஆட்சிக்குக் கொண்டுவருவது.


தொழில் செய்பவர்கள் 7 மணி நேரத்து மேல் வேலை செய்யக்கூடாது என்பதுடன், அவர்களு டைய வாழ்க்கைநிலை உயர்த்தப்படுவது. தொழி லாளிகளுக்கு கூலியை உயர்த்தி அவர்களது சுக வாழ்க்கைக்கு வேண்டிய சவுகரியங்களையும், இலவச நூல் நிலை யங்கள் முதலிய வசதிகளையும் ஏற்படுத்துவது. தொழில் இல்லாமல் இருக்கின்றவர் களை சர்க்கார் போஷிக்கும்படி செய்வது.


தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு அடிப்படை உரிமைகளை வழங்குவது, விவசாயிகளுக்கு காப் பீடு வழங்குவது போன்ற திட்டங்களை அறிவித் தார். இதையும் நாம் ஆட்சியாளர்கள் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.


மேலும், கரோனா காலத்தில் வீட்டில் வேலை செய்வதாக ஆண்கள் சமூக ஊடகங்களில் ஓரிரு நாள் படங்களை போட்டனர். ஆனால், இந்த ஊரடங்கு காலத்திலும் பெண்கள் அதிகப்படியான வேலைகளை செய்து வருகின்றனர். உழைப்பாளர் தினத்தை கொண்டாடும் இந்த வேலையில், உழைப் பாளர் சிலையில் ஒருபெண்கூட இல்லை என்பது வேதனைக் குரியதாகும். பெண்களை அமைப்பு சார்ந்த, அமைப்பு சாரா தொழிலாளர்களாகக்கூட ஏற்காத நிலை உள்ளது. அவர்களைக் குறைந்த கூலிக்கு பயன்படுத்து வருகின்றனர். இவ்வாறு கழகப்பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அஅருள்மொழி உரையாற்றினார். கூட்டத்தின் முடி வில் கும்பகோணம் மாவட்ட இளைஞரணித் தலைவர் க.சிவகுமார் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment