அண்ணா விரட்டிய ஆரியம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 30, 2020

அண்ணா விரட்டிய ஆரியம்

பேராசிரியர். மு.நாகநாதன்


"அனைவரும் ஒன்று என அழகாகக் கூறிவிட்டு, அடிமைகளாக நம்மை ஆக்கிவிடுவது ஆரியம். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், ஆணவத்தை- ஆர்ப் பரிப்பை அணுவளவும் குறைத்துக் கொள்ள மனமின்றி இருப்பது  ஆரியம்.


அரசர்களை ஆண்டிகளாக்கியதும், ஆடு மாடுகளுடன் வந்தோருக்கு வீடு வாசல்  தந்து, மற்றவருக்குக் கேடு செய்யும் மூடமதியினைப் பீடமேற்றியதும் ஆரியம்.


கற்பனையை ஊட்டி, கருத்திலே துலங்கும்  அறிவினை ஓட்டி, பழங்குடி மக்களை வாட்டி, பார்ப்பனியம் எனும் பொறியிலே தமிழரை மாட்டியதும் ஆரியம். அந்த ஆரியம் தேவனைச் சாட்சிக்கு இழுக்கும்! மந்திரம் கூறி மக்களை மிரட்டும்!!    


மகாதேவன் கட்டளை எனக்கூறி மயக்கும்! மட்டற்ற மடமைத் தனத்திலே மக்களை அழுந்தச் செய்து களிக்கும்!!


விளைநிலத்துக் களை போலத் தமிழகத்திலே தோன்றி, வீறு கொண்டோரை விம்மிடச் செய்துவிட்டதும் ஆரியமே!


தோள் தட்டி, மார்தட்டி வாழ்ந்த மறத்தமிழனை, இன்று வயி றொட்டிக் கன்னத்தே குழித்தொட்டிப் பட்டியில் வாழும் பாமர னாக்கியதும் ஆரியமே!


அபினைக் கொடுத்து உடலைக் கெடுத்து, பின்னர் அந்த அபின் கிடைக்காவிட்டால் எதைக் கொடுத்தேனும் அந்த அபினைப் பெற வேண்டிய கேவலமான நிலைமைக்குக் கொண்டு வரப்பட்டவர்கள் போல, ஆரியம் பையப் பையத் தன் நஞ்சினை ஊட்டித் தமிழனைச் செயலற்றவனாக்கிவிட்டது!


அண்ணாவின் ஆரிய மாயையைப் ஆழமான கருத்துகளைப் பின்பற்றி - இன்றைய  நீதித் துறையில், நிதித் துறையில், நிர்வாகத் துறையில், கல்வித் துறையில், வங்கித் துறையில், பத்மா ஆடும் கலைத்துறையில், உச்சப் பணக்காரர்களான முதலாளிகள்  நடத்தும் தனியார் துறை வரை நடக்கும்  வஞ்சக செயல்களும், அதற்குத் துணை போகும் அரசுகளும், ஆணை போடும் சனாதனத்தின் தலைமையும் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? எப்போது மீண்டும் விரட்டப்போகிறீர்கள்?


No comments:

Post a Comment