நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு உள்துறை அமைச்சகம் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 2, 2020

நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு உள்துறை அமைச்சகம் அறிவிப்பு


புதுடில்லி,மே2  பன்னாட்டளவில் உயிரிழப்புகளை யும், பெருமளவிலான பாதிப்புகளையும் ஏற் படுத்தி வரும் கரோனா வைரஸ் பரவலைத் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக  ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் 21 நாள்கள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு, பின்னர் ஏப்14இல் மே3வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது மத்திய உள்துறை அமைச்சகம் மே18 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


கரோனா தொற்று பரவல் காரணமாக பன் னாட்டளவில் உயிரிழப்பு மற்றும் நோய்த் தொற்றுப் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் கரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இந்நிலையில் நாடு முழு வதும் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பின்பற்றப்பட்டு வரும் ஊரடங்கு உத்தரவு மே 18 ஆம் தேதி வரை  நீடிக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது


இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கூறியதாவது:


சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என மண்டலங்கள் பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல் படுத்தப்படும். அதன்படி;


சிவப்பு மண்டலங்களின் கட்டுப்பாடுகள்


* சிவப்பு மண்டலமாக உள்ள பகுதிகளில் இந்த ஊரடங்கில் எந்தத் தளர்வும் இருக்காது. மற்ற பகுதிகளில் இருக்க வாய்ப்புள்ளது.


* சென்னை, டில்லி, மும்பை ஆகிய பகுதிகளில் சிவப்பு மண்டலமாக வருவதால் தமிழகத்தில் சென்னையிலும் இந்த ஊரடங்கு தளர்வு இல்லாத நிலையில் தொடரும் என்று தகவல்கள் தெரிய வந்துள்ளது.


* நாடு முழுவதும் மே 18 ஆம் தேதிவரை பள்ளி கள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் இயங்காது.


* உணவக விடுதிகள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்களுக்கு அனுமதி இல்லை.


* மத வழிபாடுகள், அரசியல் கூட்டங்கள் உள் ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட் டுள்ளது.


* பேருந்துகள், முடிதிருத்தகங்கள், அழகு நிலையங்கள் இயங்கத் தடை தொடரும். சைக்கிள் ரிக்சா, ஆட்டோ, கார் இயக்கத் தடை தொடரும்.


* விமானம், ரயில், மெட்ரோ மற்றும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அடுத்த 21 நாட்களுக்கு இயங்காது.


* மக்கள் அதிகமாகக்கூடும் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி கிடையாது.


* சிவப்பு மண்டலங்களில் தனியார் அலு வலகங்கள் 33 விழுக்காடு பணியாளர்களுடன் மட்டும் செயல்பட வேண்டும். ஏனைய ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறே பணி என்ற வகையில் செயல்பட வேண்டும்.


* சிவப்பு மண்டலங்களில் 2 சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டும் பயணிக்கலாம்.


* சிவப்பு மண்டலங்களில் நகரப் பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் ஆலைகள் இயங்க அனுமதி.


* அத்தியாவசிய தேவையின்றி இரவு 7 மணி முதல் காலை 7 மணிவரை மக்கள் வெளியே வரக்கூடாது.


* முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டுக் கண்டிப்பாக வெளிவரக்கூடாது.


* சரக்குப் போக்குவரத்து எந்தத் தடையும் இல்லை.


ஆரஞ்சு வண்ண பகுதிகளுக்கான


அறிவிப்புகள்


* ஆரஞ்சு வண்ண மாவட்டங்களில் வாடகைக் கார்கள் ஒரு பயணியுடன் மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்படும்.


* மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம்.


* மேலும் 2 வாரங்களுக்குச் சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை.


பச்சை மண்டலங்களில்


வெளியிட்டுள்ள அறிவிப்புகள்


* பசுமை மண்டலத்தில் பேருந்துகள் 50விழுக்காடு பயணிகளுடன் மட்டுமே இயங்க வேண்டும். மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம்.


* 4 சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் 3 பேரும், இரு சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் 2 பேரும் செல்லலாம்.


* நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் தொடர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


* பேருந்து டெப்போக்களில் 50 விழுக்காடு பேருந்துகளை மட்டுமே இயக்க வேண்டும்.


* பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டல பகுதிகளில் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கும் இ- வணிகத்தில் அனுமதி.


* கரோனா பாதிப்பு இல்லாத பச்சை மண்டலங்களில் மதுக்கடைகள், பீடா கடைகள் திறக்கலாம்.


இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment