எங்கே போனார் அமித்ஷா கட்டுரை தீட்டிய சிவசேனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 29, 2020

எங்கே போனார் அமித்ஷா கட்டுரை தீட்டிய சிவசேனா


டில்லி கலவரத்தின் போது


மும்பை, பிப்.29 டில்லியில் கலவரம் நடந்தபோது, உள் துறை அமைச்சர் அமித் ஷாவை எங்குமே பார்க்க முடியவில்லை. அவர் எங்கு சென்றிருந்தார் என்று சிவ சேனா கேள்வி எழுப்பியுள் ளது.


குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக 70 நாட்களுக்கும் மேலாக ஷாகின் பாக் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே டில்லி வடகிழக்கு பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதல் கலவரமாக மாறியது.


அதில் பலியானவர்களின் எண்ணிக்கை 40அய் எட்டி யுள்ளது. 200க்கும் மேற்பட் டோர் காயமடைந்துள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத உள்துறை அமைச் சர் அமித் ஷா பதவி விலக வலியுறுத்தி, குடியரசுத் தலை வரைச் சந்தித்து காங்கிரஸ் மனு அளித்துள்ளது.


இந்நிலையில், சிவசேனா வின் அதிகாரபூர்வ நாளே டான சாம்னா, டில்லி கலவரத்தைக் கட்டுப்படுத்த அமித் ஷா தவறிவிட்டதாக விமர்சித்து உள்ளது. அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ள தாவது:


டில்லி தேர்தல் பிரச்சாரத் துக்காக அமித்ஷா நீண்ட நேரம் ஒதுக்கினார். வீடு வீடாகச் சென்று பாஜக ஆதரவாளர்களுக்கு வாக்கு சேகரிக்கத் துண்டுப் பிரசுரங் களை வழங்கினார். ஆனால், கலவரம் நடந்து மோசமான சூழல் நிலவிய போது அமித் ஷாவை எங்கும் காண முடியவில்லை. அவர் எங்கு சென்றார்?


ஒருவேளை, வேறு ஏதேனும் கட்சி மத்தியில் ஆட்சியில் இந்நேரத்தில் இருந்திருந்தால், உள்துறை அமைச்சர் பதவி விலகக் கோரி பாஜக மிகப்பெரிய ஊர்வலத்தையும், கண்டனப் பேரணியையும் நடத்தி இருக்கும்.


ஆனால், இப்போது அவ் வாறு ஏதும் நடக்கவில்லை. ஏனென்றால் பாஜக ஆட்சி யில் உள்ளது.எதிர்க்கட்சியினர் பலவீனமானவர்களாக இருக்கிறார்கள்.  நாடாளு மன்றம் அடுத்த வாரம் கூடு கிறது. டெல்லி கலவரம் குறித்து எதிர்க்கட்சியினர் நிச்சயம் பாஜகவை கேள்வி கேட்பார்கள் என்று அந்த கட்டுரையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


 


No comments:

Post a Comment