நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 7, 2020

நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா


பிரியங்கா காந்தி கேள்வி


புதுடில்லி, பிப்.7 காஷ்மீரில் அரசியல் தலை வர்கள் 6 மாதங்களாக வீட்டுச்சிறையில் வைக்கப்பட் டுள்ளது குறித்து, நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா? என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.


ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு தகுதி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்து செய்யப்படு வதாக மத்திய அரசு அறிவித்தது.


இதனால் பாதுகாப்பு கருதி காஷ்மீர் முன்னாள் முதல்-அமைச்சர்களான மெஹபூபா முப்தி, பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அவர்களை விடுவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், காஷ்மீர் அரசியல் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டு இன்றுடன் ஆறு மாதங்கள் ஆகியும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை.


இந்நிலையில், காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சுட்டுரைப் பதிவில் காஷ்மீரில் இரண்டு முன்னாள் முதல் அமைச்சர்கள் எந்தவித குற்றச் சாட்டுகளும் பதியப்படாமல் 6 மாதங்களாக சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்களும் காஷ்மீரில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 6 மாதங்களுக்கு முன்னர் இது எத்தனை காலம் தொடரும் என கேள்வி எழுப்பினோம். ஆனால் தற்போது நாம் இன்னும் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா? அல்லது இல்லையா? என்ற கேள்வி எழுப்புகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment