நரிக்குறவர் சமூகத்தின் கல்விக் கனவை சுமக்கும் கவுசல்யா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 28, 2019

நரிக்குறவர் சமூகத்தின் கல்விக் கனவை சுமக்கும் கவுசல்யா


ஊசி, மணி, பாசியை தெருக்களில் விற்பனை செய்து, நாடோடிகளாக வாழ்ந்து வரும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர், அதுவும் ஒரு பெண்  கல்வியால் உயரம் தொட்டுள்ளார்.   21ஆம் நூற்றாண்டி லும் இதை பெருமையாக கூற வெட்கமாகத் தான் உள்ளது.  இருப்பினும் வசிப்பிடங்களே இல்லாத ஒரு இனத்தில் இருந்து வந்த  கவுசல்யா கவனம் பெற்று வருகிறார்.


புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலைய சுற்றுச்சுவர் ஓரத்தில், ஒதுக்குப்புற மாக எவ்வித போக்குவரத்து வசதிகளும் இல்லாமல் அமைந்திருக்கிறது கவுசல்யா வின் குடியிருப்பு. இங்கு வாழ்ந்து வரும் சுமார் நூறு நரிக்குறவர் குடும்பங்களில் ராஜேந்திரன், வசந்தி தம்பதியருக்கு பிறந்த குழந்தைகளில் ஒருவர்தான் கவுசல்யா. இந்த சமூகத்தில் பிறந்து, பெற்றோர் என்ன சொன்னார்களோ, அந்த வேலைகளை செய்து வந்தவர்தான் கவுசல்யா.


பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தல், ஊசி மணி, பாசி மணி, பலூன் விற்பது என்று 13 வயதுவரை பெற்றோருடன் சென்று அவர் கள் வேலைகளையே செய்ததாகக் கூறுகி றார் கவுசல்யா. பள்ளிக்கு செல்லாமல் கல்வியறிவே இல்லாமல் இருந்த இவர் மீது "சமூகம்" என்கிற தொண்டு நிறுவனத்தின் பார்வை விழுந்தது. கல்வி கற்க கவுசல் யாவை இந்த தொண்டு நிறுவனம் ஊக்க மூட்டியது. அப்போதுதான் தனது வாழ்க் கையை முற்றிலும் மாற்றிவிடும் என்று அவரே எதிர்பார்க்காத முடிவை அவர் எடுத்தார்.


அவரது கல்விப் பயணம் எளிதாக இருக்கவில்லை. தாய், தந்தையை விட்டு பிரிந்து இந்த தொண்டு நிறுவனம் நடத்தி வரும் இல்லத்திற்கு கவுசல்யா சென்றார்.


தங்களை விட்டு சென்றுவிட்டால், தங்கள் சமூகத்தின் இயல்பை தொலைத்து வாழ்வார்கள் என்று நம்புகிற கவுசல்யாவின் தந்தை, இந்த தொண்டு நிறுவனத்திடம் தொடக்கத்தில் சண்டையிட்டுள்ளார். கவு சல்யா கல்வியில் காணும் முன்னேற்றம் இப் போது அவரை அமைதியாக்கி இருக்கிறது.


13 வயது என்பதால், வயதிற்கேற்ப எட் டாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார் கவுசல்யா. அப்போதுதான் உயிர் மெய் எழுத்தக் களான அ ஆ இ ஈ க ஞ ச மற்றும் 1 2 3 4 5 எல்லாம் அவருக்கு அறிமுகமாயின.


பள்ளியில் தன்னுடைய தொடக்க நாட் களை பற்றி கவுசல்யா நினைவு கூர்ந்த போது, "என்னை எல்லோரும் வித்தியாச மாக பார்த்தாங்க. எல்லாரும் பேசுவதுபோல என்னால் பேச முடியாமல் மொழி பிரச் சினையும் இருந்தது. ஆசிரியர்கள் பாடம் நடத்தியது எதுவும் புரியல. அழுதும் இருக்கிறேன். ஆனால், படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்," என்று தெரிவித்தார். தனது இன்னல்களை எல்லாம் பகிர்ந்து கொண்டபோது, எழுத்துகளை கற்கவும், எல்லோரைப் போல பேசவும் இந்த தொண்டு நிறுவனம் பயிற்சி அளித்த தாக தெரிவித்தார் கவுசல்யா. ஒவ்வொரு தேர்விலும், குறைவான மதிப்பெண்கள் எடுத்தாலும், தன்னுடைய பின்னணியை, நிலைமையை ஆசிரியர்கள் நன்றாகவே புரிந்து நடந்து கொண்டார்கள் என்று அவர் கூறினார். "இரவு 11.30 மணி வரையும், காலையில் மூன்று மணிக்கு எழுந்தும், படித்து கடும் முயற்சி மேற்கொண்டு பத்தாம் வகுப்பில் 344 மதிப்பெண்கள் பெற்றேன்" என தெரிவிக்கும் கவுசல்யா, "மேனிலை பள்ளிக்கு சென்று படிப்பேன் என்று நினைத்தே பார்க்கவில்லை" என்றார்.


கவுசல்யாவுக்கு அடுத்த சவால் கல்லூரிப் படிப்பு. ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரியி லுள்ள விநாயகா மிஷன் காலேஜ் ஆப் நர்சிங்-கில் செவிலியர் பட்டயப் படிப்பு (மூன்று ஆண்டுகள்) பயின்று வரும் இவர், இந்த கல்வியாண்டு படிப்பை முடிக்கவுள் ளார். பாடங்கள் முழுவதும் ஆங்கிலத்தில் சொல்லி கொடுக்கப்படுவதால் புரியாமல் தவித்த தனக்கு, கல்லூரி ஆசிரியர்களும், நண்பர்களும் பெரிதும் உதவினார்கள் என்கிறார். தான் படித்து, பத்தாம் வகுப்பில் 344 மதிப்பெண் பெற்றது, தனது சமூக மக்களிடம் பெரும் கவனம் பெற்றது என் கிறார் கவுசல்யா.


இந்த சமூக குழந்தைகளுக்கு கல்வி கிடைக்காமல் போய்விடக் கூடாது என்று எண்ணிய கவுசல்யாவுக்கு உதவிக்கரம் நீட்டுகிற தொண்டு நிறுவனம், கல்வியில் கவுசல்யா பெற்று வரும் வெற்றிகளை அந்த மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பரப்புரை செய்துள்ளது.


கவுசல்யாவை பார்த்து அவரது தோழி கள் ஊர்வசியும், துர்காவும் ஓராண்டு நர்சிங் டிப்ளமோ படித்துவிட்டு, இப்போது சென் னையிலுள்ள மருத்துவமனையில் வேலை செய்து வருகின்றனர். உயர் கல்வி பயின்று வரும் கவுசல்யாவை பார்த்து, தாங்கள் வேலைக்கு அழைத்து செல்லும் குழந்தை கள் பள்ளிக்கு அனுப்பப்பட வேண்டியவர் கள் என்பதை பெற்றோர் உணரத் தொடங்கி யுள்ளனர். மேலும், கவுசல்யாவுக்கு விருது கள் மூலம் கிடைத்துள்ள அங்கீகாரம், இவ ரது சமூகத்தை சேர்ந்த எல்லா குழந்தைக ளிடமும் படிக்க வேண்டும் என்ற ஆர் வத்தை தூண்டியுள்ளது.


இப்போது, லாஸ்பேட்டையில் இருந்து இந்த சமூக குழந்தைகள் அனைவரும் பள்ளி சீருடையில் பள்ளிக்கு சென்று படித்து வருகின்றனர். மேனிலை படிப்பு முடிந்து, நர்சிங் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த முதலாண்டில் கவுசல்யாவுக்கு கிடைத்த இரண்டு விருதுகள் பெரும் அங் கீகாரத்தை அவருக்கு வழங்கின. 2018ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி பெண்கள் தினத்தில், புதுச்சேரி  முதலமைச்சர் நாரா யணசாமியும் தன்னம்பிக்கை மிக்க சிறந்த பெண் விருதை கவுசல்யாவுக்கு வழங்கி சிறப்பித்துள்ளார்.


நரிக்குறவர் சமூகத்தில் இருந்து கல்லூரி கல்வி பயிலும் பெண் என 2018 "சைல்டு லீடர்" விருதை விநாயகா மிஷன் காலேஜ் ஆப் நர்சிங், கவுசல்யாவுக்கு வழங்கியது. முன்னதாக, 2017ஆம் ஆண்டு "சைல்டு லீடர்" விருதை இளைஞர்கள் மற்றும் குழந்தைகளிடம் தலைமை பண்புகளை வளர்க்க பணிபுரியும் அறக்கட்டளை ஒன்று இவருக்கு வழங்கியிருந்தது.


நரிக்குறவர் சமூக குழந்தைகள் கல்வி கற்க வேண்டுமென ஊக்கமூட்டியதற்காக 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி "இளம் கலை சுடர்" விருதும், பசுமை சுற் றுச்சூழல் பணிகளில் பங்கேற்றதற்காக அப் துல் கலாம் பசுமை வளர்ச்சி இயக்கத்தின் விருதும் இவருக்கு கிடைத்துள்ளன.


மருத்துவத்தில் செவிலியர் பட்டப் படிப்பு என்பது அயல்நாடுகளில் நல்ல வரு வாய் ஈட்டும் ஒரு தொழிற்கல்வி ஆகும். ஆனால் கவுசல்யா தனது எதிர்காலம் பற்றிக் கூறும் போது நான் நன்றாக படித்து வருகிறேன், முதல்வகுப்பில் தேர்ச்சி பெறும் அளவிற்கு திறமை பெற்றுவிட்டேன், ஆனால் வேலைக்குச்சென்று பொருள் ஈட்டுவதில் எனக்கு விருப்பமில்லை, செவி லியர் உயர்கல்வியான முதுகலை முடித்து பேராசிரியராகி என்னைப் போன்ற குழந் தைகளுக்கு உயர்கல்விகிடைக்க பாடுபடு வதே என்னுடைய எதிர்கால குறிக்கோள் என்று கூறினார். எதிர்காலத்தில், தனது சமூக மக்களுக்கு கல்வியின் முக்கியத்து வத்தை எடுத்து சொல்வதோடு, அவர்க ளுக்கு மருத்துவ வசதிகள் கிடைக்க செய்து, சுகாதாரத்தில் வளர தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள் வதே தனது லட்சியம் என்கிறார் கவுசல்யா.


No comments:

Post a Comment