மூத்த தலைவர் தோழர் ஆர். நல்லக்கண்ணு அவர்களுக்கு திராவிடர் கழகம் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 26, 2019

மூத்த தலைவர் தோழர் ஆர். நல்லக்கண்ணு அவர்களுக்கு திராவிடர் கழகம் வாழ்த்து

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முதுபெரும் தொழிற்சங்க வாதியும், பலவிதமான மக்கள் உரிமைப் போராட்டங்களில் சிறை சென்ற கொள்கைப் போராளியும் ஆன தோழர்  ஆர். நல்லக்கண்ணு அவர் களுக்கு இன்று 95 வயது  என்கிறபோது,  அம்முதியவரை - முதிர்ந்தவரை வாழ்த்தி, நூறாண்டு கடந்து நல்ல உடல் நலத்தோடு வாழ வேண்டும் என விரும்புகிறது திராவிடர் கழகம்.


எளிமை, இனிமை, இலட்சியப்பற்றோடு, கொண்ட கொள்கை - இலட்சியங்களுக்காக எவ்விலையினையும், எந்நேரத்திலும் தருவதற்குத் தயார் என்னும் தியாக சீலர் அவர்.


பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து, தொண்டறம் தொடர வாழ்த்துகிறோம்!


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்


26.12.2019

No comments:

Post a Comment