
மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் வழக்குரைஞர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், அன்னாரின் படத்திற்கு வீரவணக்கம் செலுத்தினார். ஆம்ஸ்ட்ராங்கின் வாழ்விணையர் பொற்கொடிக்கு ஆறுதல் கூறினார்.
உடன் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், அரும்பாக்கம் சா.தாமோதரன் அயன்புரம் துரைராஜ், வழக்குரைஞர்கள் உதயா, ஆதி, நா. பார்த்திபன், முரளிகிருஷ்ணன் சின்னதுரை, இராமச்சந்திரன், ராஜா மற்றும் தோழர்கள் உள்ளனர். (அயன்புரம், 10.07.2024)
No comments:
Post a Comment